2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரஙள் இரத்து!!

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட இருபது இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் ஸ்மார்ட் சிப் இல்லாமல் எட்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டியவை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்....

கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்தின் வழிபாட்டுக்கு இன்று அனுமதி!

வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கடந்த 30வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்தின் வழிபாடுகளுக்கு அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்க்கு சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.
Ad Widget

வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அலுவலகம் புதிய இடத்தில் திறந்து வைப்பு!

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா அலுவலகமானது வவுனியா மன்னர் வீதியில் இன்று புதிய அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதுவரை காலமும் வவுனியா வெளிவட்ட வீதியில் இயங்கி வந்த நிலையில் இடவசதி மற்றும் பொதுமக்களின் வசதி கருதி குறித்த இடத்தில் தொடர்ச்சியாக அலுவலகத்தை நடத்த முடியாத காரணத்தினால் மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான மன்னார் வீதியில் அமைந்துள்ள கட்டடத்தில்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதிய பஸ் சேவை!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையம் வரையான புதிய சொகுசு பஸ் சேவை நேற்று (15) ஆரம்பமானது. இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், நாட்டிற்குள் பயணிக்க போக்குவரத்து சேவை ஏஜென்சியின் வசதிகளைப் பெறவில்லை என்றால், அவர்கள் விமான நிலையத்தில் இருந்து...

நாகபட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் ஆரம்பம்!

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி சிவகங்கை...

தமிழ் வேட்பாளர் விவகாரத்தில் தமிழரசுக் கட்சி விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டும் – சி.வி.விக்கினேஸ்வரன்

தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் பா.அரியேத்திரனுக்கு அனைத்து தமிழர்களும் வாக்களிக்க வேண்டும்.தமிழ் வேட்பாளர் விவகாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்காமல் இருப்பது கவலைக்குரியது. தமிழர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்....

வெற்றிக்காக போட்டியிடவில்லை; தமிழர்களின் ஒற்றுமையை பலப்படுத்தவே போட்டியிடுகிறேன் – பா.அரியநேத்திரன்

தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக போட்டியிடவில்லை, தமிழ் மக்களின் ஒற்றுமையை ஒரு சக்தியாக இலங்கை அரசுக்கும், சர்வதேசத்துக்கும் காண்பிப்பதற்காகவே போட்டியிடுகிறேன் என தமிழ் பொதுவேட்பாளரான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் வியாழக்கிழமை இடம்பெற்ற வேட்புமனு கையளிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சிங்கள அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை, கடந்த...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” சின்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், பொதுஜன பெரமுன மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் கயாஷான் நவனந்த, திகாமடுல்ல மாவட்ட...

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் பெயர் பட்டியல்!

2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 01. திலித் சுசந்த ஜயவீர 02. சரத்...

பறிக்கப்பட்ட அதிகாரங்களை திருப்பி வழங்க ஜனாதிபதி ரணில் இணக்கம்!

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திருப்பித்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை வழங்கவேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கைத்...

கிளிநொச்சியில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 243 பேரிடம் காணாமல் போனோர் பற்றிய அலுவலக அதிகாாிகள் (OMP) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா். காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினரால் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 243 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 128 பேரிடமும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்...

செஞ்சோலை படுகொலை: உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி

முல்லைத்தீவு, வள்ளிபுனம் -செஞ்சோலை வளாகத்தில் இராணுவத்தின் விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு செஞ்சோலை வளாகத்தில் உணர்வுபூர்வமாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது முல்லைத்தீவு வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய...

மியன்மாரில் 20 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சுமார் 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில், அவர்களில் 8 பேர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டதுடன்...

பாடசாலைகளுக்கு 16ம் திகதி முதல் விடுமுறை!!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில், இரண்டாம் தவணை நிறைவடைவது தொடர்பாக கல்வி அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாம் பாடசாலைத் தவணை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும் என அந்த...

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 40 பேர் கட்டுப்பணம் செலுததினர்!!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றுடன் கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சேந்தாங்குளம் பகுதியில் இரு குழுக்கள் இடையே மோதல்! படகுகளுக்கும் தீ வைப்பு!!

யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் பகுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் ஒரு படகு முற்றாக சேதமடைந்தது. சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று இரவு 9 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. இதன்போது சில வாடிகளும் எரிந்து நாசமானது. இதனையறிந்து அங்கு கூடிய பொதுமக்கள் தீப் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

தாயின் மரணத்திற்கு நீதி கோரி நடக்கும் போராட்டத்தில் சிந்துஜாவின் கைக்குழந்தை!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் நடக்கும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கருப்புக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாட்டினால்...

பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் கும்பல்!

பேஸ்புக் ஆதரவுக் குழுக்களாக தம்மை அடையாளப்படுத்தி, நபர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவித்தார். நேற்று (12) மட்டும் இது தொடர்பான 8...

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்!

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு கொக்குவில் சந்தி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரத்தினை வழங்கி ஜனாதிபதி தேர்தலை...

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பயணிகள் படகுச் சேவை இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கசன்துறைக்கு இயக்கப்படவுள்ளது இதேவேளை பயணிகள் படகு சேவைக்கான பயண சீட்டுகள் நேற்று (12) முதல் முன்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த பயணிகள் படகுச் சேவையானது...
Loading posts...

All posts loaded

No more posts