- Saturday
- February 1st, 2025
முல்லைத்தீவு, வள்ளிபுனம் -செஞ்சோலை வளாகத்தில் இராணுவத்தின் விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு செஞ்சோலை வளாகத்தில் உணர்வுபூர்வமாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது முல்லைத்தீவு வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய...
மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சுமார் 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில், அவர்களில் 8 பேர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டதுடன்...
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில், இரண்டாம் தவணை நிறைவடைவது தொடர்பாக கல்வி அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாம் பாடசாலைத் தவணை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும் என அந்த...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றுடன் கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் பகுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் ஒரு படகு முற்றாக சேதமடைந்தது. சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று இரவு 9 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. இதன்போது சில வாடிகளும் எரிந்து நாசமானது. இதனையறிந்து அங்கு கூடிய பொதுமக்கள் தீப் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் நடக்கும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கருப்புக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாட்டினால்...
பேஸ்புக் ஆதரவுக் குழுக்களாக தம்மை அடையாளப்படுத்தி, நபர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவித்தார். நேற்று (12) மட்டும் இது தொடர்பான 8...
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு கொக்குவில் சந்தி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரத்தினை வழங்கி ஜனாதிபதி தேர்தலை...
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பயணிகள் படகுச் சேவை இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கசன்துறைக்கு இயக்கப்படவுள்ளது இதேவேளை பயணிகள் படகு சேவைக்கான பயண சீட்டுகள் நேற்று (12) முதல் முன்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த பயணிகள் படகுச் சேவையானது...
தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் பொதுமக்களின் குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார். 'எமது வாக்காளர்கள் புள்ளடி இடுவதற்குப் பழகியிருக்கிறார்கள். எனவே வாக்குச்சீட்டில் எவரேனும் புள்ளடி இட்டால், அதனை நாம் '1' எனக் கருதுவோம். அதேபோன்று இரண்டாம் மற்றும்...
ஜனாதிபதி தேர்தலில், தமிழ் பொதுக் கட்டமைப்பினால் சுயேட்சை வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (12) கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினரான, த.சிற்பரன் பொது வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்.
அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர்கள் இன்று திங்கட்கிழமை (12) முதல் நாளை வரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இதற்கிணங்க நீர்கொழும்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 39 கிராம சேவகர்கள் காரியாலயங்களும் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் கிராம சேவகர்கள் இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை கடமையில் இருந்தும் விலகியிருப்பதோடு புதன்கிழமை...
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: JC 23 வெளிச்சுற்று வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி வித்தியாலத்திற்கு முன்னால் மன்னார் வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நிறுவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இலக்கம் JC 23 வெளிச்சுற்று வவுனியா...
தேசிய ஒற்றுமைக்கான சர்வ மத கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் பொரளையில் அமைந்துள்ள Bishop தலைமை காரியாலயத்தில் வணக்கத்துக்குரிய களனி வஜ்ர தேரரின் தலைமையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஓரினச் சேர்க்கை சட்டவாக்கத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கார்டினல் ரஞ்சித் மல்கம் மற்றும் வணக்கத்துக்குரிய சோம ரத்தின தேரர், வணக்கத்துக்குரிய ஜீனானந்த தேரர், கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர...
024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதை அவர் தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் பண்டத்திரிப்பு - செட்டிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவரின் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், அயலவர்கள் அது குறித்து சோதித்த போது சடலம் வீட்டின்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்புக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இந்திய மத்திய அரசு கடந்த மே 14 அன்று அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மீத் ப்ரீத்தம் சிங் அரோரா தலைமையிலான தீர்ப்பாயம் தடை செய்வது...
யாழ்ப்பாண நீதிமன்றிற்கு வழக்கு விசாரணைக்கு மதுபோதையில் வந்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ். நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றுக்கு வந்த நபர் மதுபோதையில் வந்துள்ளார். குறித்த நபர் மதுபோதையில் மன்றுக்கு விசாரணைக்கு வந்ததை அடுத்து, அந்நபரை கைது செய்த நீதிமன்ற பொலிஸார் மன்றில்...
முல்லைத்தீவு கல்விளான் பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (24.07.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வயலில் அறுவடை செய்த நெல்லை வீதி காவலில் பாதுகாத்தவரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளிவராத நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரைணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வேலணை பிரதேச மருத்துவமனை மற்றும் வேலணை பிரதேச சுகாதார மருத்துவர் பணிமனை அமைந்துள்ள வளாகத்திற்கு அருகிலுள்ள தனியார் காணியினுள் மருத்துவமனை வாளாக எல்லையிலிருந்து அண்ணளவாக 10மீற்றர் தூரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பாவிக்கப்பட்ட ஊசிமருந்து குப்பிகள் மற்றும் மருந்து ஏற்ற பயன்படுத்திய ஊசிகள் இப்பகுதியில் கொண்டுவந்து கொட்டப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பாக...
Loading posts...
All posts loaded
No more posts