- Tuesday
- November 26th, 2024
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது. தென்னிலங்கையில் உள்ள தலைவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்தே இறுதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேநேரம், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற ஆணையைத் தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் நிராகரித்து வருகின்ற நிலையில் தேர்தல்களைத்...
முல்லைத்தீவில் தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண் பிள்ளையை பராமரிக்கும் பொலிஸ் அதிகாரி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. வெலிஓயா, கல்யாணபுர பிரதேசத்தில் குழந்தையை கொடூரமான முறையில் தந்தை தாக்கியது தொடர்பில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தையுடன் தாக்குதலுக்கு துணை புரிந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான சிறுமி பொலிஸாரின்...
முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இன்று (05) அதிகாலை ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று (04) முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு சென்று மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் புறப்பட்டு இன்று அதிகாலை ராமேஸ்வரம் அடுத்த சேராங் கோட்டையை சென்றடைந்துள்ளனர். தாய், தந்தை மற்றும் நான்கு பிள்ளைகள் உள்ளடங்களாக 6 பேர்...
சமூக ஊடகங்களில் வைரலான குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசி மலை பகுதியில் குறித்த நபரும் மேலும் தாக்குதல் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 45 வயதுடைய ஆண் ஒருவரும் 37...
இந்தியாவில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகள் இணைந்து யாழ்ப்பாண நகரில் நேற்று மாலை கொண்டாடின. யாழ். நகரிலுள்ள வைரவர் ஆலயத்துக்கு முன்பாக இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.கற்பூரம் கொழுத்தப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று சிதறு தேங்காய்கள்...
உயர்கல்வி பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல மாணவர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளை முகநூலில் பதிவிடுவதைப் பார்க்கிறோம். அதை செய்யக்கூடாது. அந்த பரீட்சை எண்ணில்...
வட மாகாண அரச சாரதிகள் சங்கத்தினர், கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக நேற்று இரண்டாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் 5 வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளுக்கான இடமாற்றத்திற்கு பிரதிப் பிரதம செயலரால், கடந்த வருடம் விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. ஆளுநரின் கோரிக்கை அமைய பின்னர் அந்த...
வெளிநாடுகளில் வசிப்போர்களை இலக்கு வைத்துப் பல இலட்ச ரூபாய் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைதான போலி வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்,நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர், பாடசாலை மாணவிகள் பலருடன் காதல் தொடர்புகளை பேணி வந்துள்ளமையுடன். வெளிநாடுகளில் வசிக்கும் தன்னை விட வயது அதிகமான பெண்களுடனும் காதல் தொடர்புகளைப் பேணி அவர்களை மிரட்டி...
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிழந்தவர் புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா என்பவராவார். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை...
யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அறிமுகமான நீதிமன்றங்கள், நியாய சபைகள் மற்றும் நிறுவனங்களை அவமதிக்கும் சட்ட ஏற்பாட்டின் கீழ் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொடுத்த வழக்கே தள்ளுபடி...
போலி ஆவணங்களை உருவாக்கிக் காண்பித்து மருத்துவர் என அறிமுகப்படுத்தி கனடாவில் உள்ள ஒருவரிடம் ஒரு கோடியே 42 லட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்தவின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான பொலிஸ் குழுவால் கைது...
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய 12.5 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயு 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3,790 ரூபாவாகும். 5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அதன் புதிய விலை...
இலங்கையில் 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த இறுதி யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலராக இருந்த இராணுவ அதிகாரி ஒருவர் தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக போரிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலராக இருந்த லஹிரு காவிந்த அத்துருசிங்க என்பவரே உக்ரைனுக்கு ஆதரவாக போரிடுவதாக கூறப்படுகிறது. உக்ரைன் படையில் வெளிநாட்டினரை...
2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற இணையத் தளப் பக்கத்தில் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் 346,976 பரீட்சாத்திகள் நாடு...
யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் படகு சேவை நிறுத்தப்படவுள்ளதாக கியூமெடிக்கா தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படகுச்சேவையானது, கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தரைப்பாதை இல்லாத நயினாதீவு , நெடுந்தீவு , எழுவை தீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளுக்கும் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்தன. பொருளாதார நெருக்கடி மற்றும்...
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் பரீட்சைக்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பரீட்சை திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் உயர்தரப் பரீட்சை ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற்றதுடன் அதற்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 42,883.ஆகும்...
பண்டத்தரிப்பு பகுதியில் கணவருடன் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த குடும்ப பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று புதன்கிழமை (29) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 61 வயதான சரோஜினி தேவி அல்பேர்ட் வில்லியம் என்பவரே உயிரிழந்துள்ளார் குறித்த குடும்பப்பெண் கடந்த சில தினங்களாக சுகவீனமடைந்திருந்த நிலையில் நேற்றைய...
யாழ் போதனா வைத்தியசாலையின் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருதி தாக்குதலில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன், இனிவரும் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையிலான குறித்த நடவடிக்கை ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற...
சுழிபுரம் காட்டுபுலத்தில் கடற்படை முகாமிற்காக முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், காணி உரிமையாளரின் எதிர்ப்பினையடுத்து கைவிடப்பட்டுள்ளது. சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் உள்ள 4 பரப்பு தனியார் காணியினை நில அளவைத் திணைக்களம் கடற்படையினரின் காணி சுவீகரிப்பிற்காக காட்டுப்புலத்திற்கு வருகை தந்த நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில், நாடாளுமன்ற...
யாழில் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மின் கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு சென்றுள்ளனர் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் 4 வருட காலமாக இராணுவத்தினர் முகாம் அமைத்து இருந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த காலப்பகுதிக்கான மின்சாரக் கண்டனத்தை அவர்கள் செலுத்தாமல் இருந்துள்ளனர் எனவும், நிலுவையாக...
Loading posts...
All posts loaded
No more posts