- Friday
- February 28th, 2025
வடக்கிற்கான புகையிரதப் பாதைகள் நிர்மாணப்பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வடபகுதி புகையிரத பாதையின் நிர்மாணப் பணிகள் 185 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (more…)
இன்னும் சில மாதங்களில் பண்ணை ஊடான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடையலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. குறிகாட்டுவான் வேலணை ஊடான வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பாலத்தின் ஒரு பகுதி கடல்நீர்பட்டு முற்றாக உக்கி சேதமடைந்துள்ளது. உக்கிய பகுதி தினமும் இடம்பெறும் போக்குவரத்தால் சிதைந்து வருகின்றது. இந்த வீதி, பாலம் சிதைவு குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையின்...
நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீ முல்யாணி இந்திரவதிக்கு யாழ்ப்பாணத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீ முல்யாணி இந்திரவதி தலைமையிலான குழுவினர் யாழ் மாவட்டத்தில் உலக வங்கியின் அனுசரணையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவரும்...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் நோபுஹிட்டோ ஹோபு தெல்லிப்பளை மீள்குடியேற்ற மக்களுக்கு குடிநீர் வசதி மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்களை; நேற்றய தினம் சம்பிரதாய பூர்வமாக வழங்கி வைத்தார். தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மீள்குடியேற்ற பகுதியில் சமூக செயற்பாட்டு மையத்தின் ஊடாகவும் தெல்லிப்பளை மீள்குடியேற்ற பகுதி மக்களுக்கு 5.153 மில்லியன் ரூபா நிதியில்...
இறுதி யுத்தததில் தனது மகளைப் பறிகொடுத்த தாயொருவர் மன அழுத்தம் தாங்கமுடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம், நீர்வேலி வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் தர்மலிங்கம் புனிதவதி (வயது 60) என்ற தாயொருவரே இவ்வாறு மரணமானவராவார். (more…)
கிளிநொச்சி யாழ். நீர்வழங்கல் மற்றும் சுகாதார திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபா பேர் நேரடியாக நன்மை பெறவுள்ளனர். குடிதண்ணீர் வழங்கல் மூலம் சுமார் 3 லட்சம் பயனாளிகளும் கழிவு நீர் அகற்றல் மூலம் 80 ஆயிரம் பயனாளிகளும் நீர்ப்பாசனம் மூலம் 55 ஆயிரம் பயனாளிகளுமாக மொத்தம் 4 லட்சத்து 35 ஆயிரம்...
சாவகச்சேரி சரசாலை பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதானா வைத்திசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றிக்கிழமை காலை 9.30 மணிக்கு சாவகச்சேரி சரசாலை பகுதியில் நடைபெற்றுள்ளது. (more…)
வழி அனுமதிப் பத்திரம் பெறாது வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்குள் உள்நுழையும் பஸ்களுக்கு உயர் அதிகாரிகள் ஊடாக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இவ்வாறு கூறினார். யாழ்.மாவட்ட தனியார் பஸ் சாரதிகள் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக நேற்று பிராந்திய அலுவலகத்தில் பஸ் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது....
இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் யாழ் பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமான இவ் போராட்டம் இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலையினால் இலங்கைக்கும் பாதிப்புக்கள் ஏற்ப்படும் இதனால் இந்திய அரசே உடனடியாக அணு உலை...
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 65 ஆயிரம் பேர் மனநோயாளிகளாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று நாடாளுமன்றில் யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு, பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க பதிலளிக்கும் போதே இத்தகவலை வெளியிட்டுள்ளார். (more…)
நீண்ட நாள் ஆரவாரத்திற்கு பின்னர் 15 ஆவது இலங்கை ஆளுனர்களின் மாநாடு நேற்று நிறைவடைந்துள்ளது. இந்த மாநாடு ஏன் எதற்காக நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னர். நடந்து முடிந்திருக்கின்றது. இதற்காக பல லட்சம் ரூபா பணம் தாரைவார்க்கப்பட்டுள்ளது. நேற்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றை மூன்று நாள் குத்தகைக்கு எடுத்த...
முல்லைத்தீவு கடற்கரையின் கிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள சுறாவளி, நாளை அதிகாலை 2 மணியளவில் இலங்கைக்குள் உட்புக வாய்ப்புள்ளதால் கரையோர பிரதேசங்களில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலை நிறுத்தம் இன்று வியாழக்கிழமை கைவிடப்படலாம் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். (more…)

யாழ்ப்பாணம் மட்டுவில் அம்மன் கோவிலுக்கு அருகாமையால் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் தலை நசுங்கி பலியாகியுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பிராந்திய சிவில் உபகுழுவை அமைப்பது தொடர்பான சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது (more…)

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரவீர மீளக்குடியமர்ந்த மக்களுக்கு கூரைத்தகடுகளை வழங்கினர் (more…)

யாழ் மாவட்டத்தில் வாக்காளர் பதிவு நடவடிக்கை எதிர் வரும் ஒகஸ்ட் 15 ம்திகதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. என உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார்.இந்த வாக்காளர் அட்டை மீள் பதிவுக்கு கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புகாரணத்திலேயே கால நீடிப்பு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அவர்குறிப்பிட்டார். (more…)

யுத்தத்தின் பின்னர் வடக்கில் பாடசாலைகளுக்கு அருகில் மதுபானமும் போதைப்பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். (more…)

க.பொ.த உயர்தரப் பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இப்பரீட்சைக்காக 2 இலட்சத்து 70 ஆயிரம் பரீட்சார்திகள் தோற்றவுள்ளதுடன் 12 ஆயிரம் பரீட்சை உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடவுள்ளனர். (more…)

All posts loaded
No more posts