- Wednesday
- January 15th, 2025
சமையலடுப்பு வெடித்து சிதறியதால் எரியகாயங்களுக்குள்ளான இலக்காகிய பெண் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி சிவன் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவர். (more…)
விடுதலைப்புலிகள் தற்போது இல்லாத நிலையிலேயே மாணவர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து மாணவர் கவனம் திசை திருப்பப்பட்டதும் மாணவர்கள் கல்வி வீழ்ச்சிக்கு காரணம். யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ.இராசகுமாரன் தெரிவித்தார். (more…)
இன்று காலை 10 மணிக்கு ஆயிரக் கணக்கான அடியவர்களின் அரோகராக் கோசத்துடன் கோலகலமாகவும் பக்தி பூர்வமாகவும் நல்லுார்க் கந்தன் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
யாழ் சுன்னாகம் கிழக்குப்பகுதியில் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்று அதனை குழி தோண்டிப் புதைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
பிரசவ வலி ஏற்ப்பட்ட பெண்ணிற்கு சிகிச்சை அளிப்பதற்கு வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் குறித்த பெண்ணும் கருவில் இருந்த சிசுவும் உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ் நயீனாதீவில் இடம்பெற்றுள்ளது. (more…)
இந்துக்களின் புனித தினங்களில் ஒன்றான ஆடி அமாவாசை விரதத்தை கொண்டாடுவதற்காக மரக்கறி வகைகளை வாங்குவதற்காக திருநெல்வேலி சந்தையில் அலை மோதுகின்றது மக்கள் கூட்டம். புதுச்சட்டி புதுப்பானைகளில் சோறாக்கி கறி சமைப்பதற்காக குவிக்கப்பட்டிருக்கும் சட்டி பானைகள் ஆடி அமாவாசை தினத்திற்காக மட்டும் ஒரிரு நாட்களே விற்பனைக்கு வரும் காத்தோட்டிக்காய் எனப்படும் காய்கள் விற்பனைக்கு வருவதை அவதானியுங்கள்.
யாழ்ப்பாணத்தில் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக சிங்களத் திரைப்படம் ஒன்று இம் மாதம் வெளியிடப்படவுள்ளது. (more…)
பிறந்து நான்கு நாட்களேயான ஆண் சிசுவை 2000ரூபாவுக்கு விற்பனை செய்த தாயினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவ் சம்பவம் யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.குடும்ப வறுமை காரணமாகவே சிசுவை தாய் விற்பனை செய்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்ததாக யாழ் பிராந்திய பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார்.
கைதடியில் மீளப் புனரமைக்கப்பட்ட பனை ஆராய்சி நிலையம் எதிர்வரும் 20ம்திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார். (more…)
புற்றுநோய் கிளினிக்கிற்கு சென்ற நோயாளிகளுக்கு சம்பந்தமில்லாமல் மருந்துகளை வழங்கி சிகிச்சையளிக்கும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையி்ன் பொறுப்பு வைத்தியர் வைத்திய கலாநிதி ரி.குகதாஸின் செயற்பாடுகளால் நோயாளர்கள் பெரிதும் விசனமடைந்துள்ளனர். (more…)
முன்னாள் இராணுவத் தளபதியும் அண்மையில் சிறையிலிருந்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவருமான சரத்பொன்சேகா யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார். (more…)
யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவுக்கு சிங்கர் நிறுவனத்தினால் தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களின் உள ஆற்றுப்படுத்தலுக்காகவும் பொழுது போக்கிற்காகவும் இந்த எல் சீடி ரக தொலைக்காட்சிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இதே வேளை யாழ் போதனா வைத்தியசாலைக்கு தனியார் நிறுவனங்கள் நோயாளர்களின் நலன்களுக்காக பாரிய...
வங்கி முகாமையாளர் ஒருவர் உடுவில் பகுதியில் புனரமைக்கபட்டுக் கொண்டிருக்கும் மதகு ஒன்றில் தவறி வீழ்ந்து மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம் மக்கள் வங்கியின் உதவி முகாமையாளரான தர்மலிங்கம் கனகலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.வங்கி வேலைகள் நிறைவு செய்து விட்டு வீடு திரும்பும் உடுவில் ஆலடிப்பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் இன்று புதன் கிழமை துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது.மன்னார் வவுனியா யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். இவ் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இன்று காலை வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அலுவலகத்தைப் பூட்டி அதன் திறப்பை தன்னுடன் எடுத்துச்சென்றுள்ளார் வேம்படியில் பதில் அதிபராக இருந்த முத்துக்குமாரு ரஜனி . இதனால் இன்று தனது மகளை வேம்படியில் சேர்க்க வந்த யாழ் அரச அதிபர் வாகனத்துடன் நின்று காத்திருந்து விட்டு வெளியேறினார்.இவ்வாறான செயற்பாடுகள் தங்களது அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காக ஆயிரக்கணக்கான...
யாழ் போதனா வைத்தியசாலையின் மலசலகூட குழாயிலிருந்து இறந்த நிலையில் சிசு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் சிசுக்கலைப்புக்காக வந்த குறித்த பெண் ஒருவர் மலசலகூடத்திற்குள் குழந்தையைப் பெற்று விட்டு தலைமறைவாகியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில் யாழ் போதனா வைத்தியசாலையின் மலசலகூட குழாயில் அடைப்பு...
இந்தியாவைச் சேர்ந்த ஆடை வியாபாரி ஒருவர் திருநெல்வேலியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார் .
யாழ் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இலங்கை போக்குவரத்துச் சபையுடன் இணைந்து போக்குவரத்துச் சேவையை நடாத்துவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
வடமராட்சியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிராம சேவையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
Loading posts...
All posts loaded
No more posts