சுன்னாகம் வங்கி முகாமையாளர் ஒருவர் மதகு ஒன்றில் தவறி வீழ்ந்து பலி !

வங்கி முகாமையாளர்  ஒருவர் உடுவில் பகுதியில் புனரமைக்கபட்டுக்  கொண்டிருக்கும் மதகு ஒன்றில் தவறி வீழ்ந்து மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம் மக்கள் வங்கியின்  உதவி முகாமையாளரான தர்மலிங்கம் கனகலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.வங்கி வேலைகள் நிறைவு செய்து விட்டு வீடு திரும்பும் உடுவில் ஆலடிப்பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகள்

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் இன்று புதன் கிழமை துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது.மன்னார் வவுனியா யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். இவ் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
Ad Widget

வேம்படி பாடசாலை அலுவலகத்தைப் பூட்டி திறப்பை எடுத்துச் சென்றார் முத்துக்குமாரு ரஜனி

இன்று காலை வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அலுவலகத்தைப் பூட்டி அதன் திறப்பை தன்னுடன் எடுத்துச்சென்றுள்ளார் வேம்படியில் பதில் அதிபராக இருந்த முத்துக்குமாரு ரஜனி . இதனால் இன்று தனது மகளை வேம்படியில் சேர்க்க வந்த யாழ் அரச அதிபர் வாகனத்துடன் நின்று காத்திருந்து விட்டு வெளியேறினார்.இவ்வாறான செயற்பாடுகள் தங்களது அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காக ஆயிரக்கணக்கான...

யாழ் போதனா வைத்தியசாலையின் மலசலகூட குழாயிலிருந்து இறந்த சிசுவின் உடல்

யாழ் போதனா வைத்தியசாலையின் மலசலகூட குழாயிலிருந்து இறந்த நிலையில் சிசு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் சிசுக்கலைப்புக்காக வந்த குறித்த பெண் ஒருவர் மலசலகூடத்திற்குள் குழந்தையைப் பெற்று விட்டு தலைமறைவாகியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில் யாழ் போதனா வைத்தியசாலையின் மலசலகூட குழாயில் அடைப்பு...

இந்தியாவைச் சேர்ந்த ஆடை வியாபாரி மீது திருநெல்வேலியில் தாக்குதல்

இந்தியாவைச் சேர்ந்த ஆடை வியாபாரி ஒருவர் திருநெல்வேலியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார் .

இலங்கை போக்குவரத்துச் சபையுடன் இணைய மறுக்கும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

யாழ் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இலங்கை போக்குவரத்துச் சபையுடன் இணைந்து போக்குவரத்துச் சேவையை நடாத்துவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் வடமராட்சியில் கிராமசேவையாளர் பலி

வடமராட்சியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிராம சேவையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

நெல்லியடி தீவிபத்தில் இரு கடைகள் முற்றாக சேதம்

யாழ் நெல்லியடி சந்தைப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தீவிபத்தொன்றின் காரணமாக இரண்டு கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் துரத்த மோட்டார் சைக்கிள் ஒடியவர்கள் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில்

சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த மேற்படி இளைஞர்களை கொடிகாமப் பொலிஸார் மறித்துள்ளனர். எனினும் இவர்கள் நிற்காமல் மோட்டார் சைக்கிளைச் வேகமாக செலுத்திச் சென்றுள்ளனர். (more…)

கைவிடப்பட்ட நிலையில் பிறந்து ஒருநாளேயான சிசு மீட்பு: யாழில் சம்பவம்

யாழ். பாஷையூர் பற்றிமாதா தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியிலிருந்து பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று கைவிடப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

காரைநகரில் மனநலம் குன்றிய யுவதியை முஸ்லிம்கள் இருவர் வன்புனர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

காரைநகரில் மனநலம் குன்றிய யுவதியை முஸ்லிம்கள் இருவர் வன்புணர்வுக்கு உட்படுத்திய செயல் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது (more…)

யாழில் இராணுவ சிப்பாயைத் தாக்கிய பொதுமக்கள்

மதுபோதையில் கே.கே.எஸ் வீதியிலுள்ள கொத்து ரொட்டிக் கடையில் தகராறில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர். (more…)

யாழ். மாவட்ட புதிய அரச அதிபர் இன்று பதவியேற்பு

யாழ்.அரச அதிபராகக் கடமையாற்றி திருமதி இமெல்டா சுகுமார் இடமாற்றம் பெற்று ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் நிலையிலேயே, மட்டக்களப்பு அரச அதிபராக கடமையாற்றிய சுந்தரம் அருமைநாயகம் யாழ்.அரச அதிபராக நியமிக்கப்பட்டார். (more…)

யாழில் நடைபெற்ற அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான கருத்தரங்கு

ஜனநாயக அடிப்படையில் அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான இரண்டாவது வழிகாட்டல் கருத்தரங்கு யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. (more…)

“என்னுடைய இடமாற்றத்தை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை” : இமெல்டா சுகுமார் கவலை

யாழ்.அரச அதிபராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது எனக்கு இடமாற்றம் வரும் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லையென்று, கவலையுடன் யாழ்.அரச அதிபராகக் கடமையாற்றிய திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். (more…)

டக்ளஸுக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் சபையில் கடுமையான வாய்ச்சண்டை

பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் டக்ளஸுக்கும் இடையில் கடுமையான வாய்ச்சண்டை ஏற்பட்டது. (more…)

யாழ்.அரச அதிபர் திடீர் இடமாற்றம்

யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் பதவி உயர்வுடன் ஜனாதிபதி செயலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு செயலாளர் பதவி ஒன்று வழங்கப்படலாம் என்று தெரியவருகிறது. இவரது இடத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் எஸ். அருமைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, வவுனியாவுக்கு புதிய அரச அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

சங்கங்களில் கோதுமைமாவின் நுகர்வு பெரும் வீழ்ச்சி , தீட்டல் பச்சை அரிசிக்கு மவுசு

கோதுமை மாவின் நுகர்வு குறைவடைந்துள்ள அதேவேளை சங்கங்களில் தீட்டல் பச்சை அரிசியின் நுகர்வு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது (more…)

போதனா வைத்தியசாலையில் ஊழியர் போன்று கொள்ளையர்; நோயாளர்களே! உங்கள் நகை கவனம் ஆஸ்பத்திரிப் பொலிஸார் எச்சரிக்கை

பெரும்பாலும் வெளிநோயாளர் பிரிவிலேயே இந்தக் கொள்ளை அதிகம் இடம்பெறுகிறது. மருத்துவ விடுதிகளிலும் இவை ஆங்காங்கே இடம்பெறுகின்றன. (more…)

யாழ். மாவட்டத்தில் பத்தாயிரம் குடும்பங்கள் மீள்குடியேற விண்ணப்பம்

யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறுவதற்காக இதுவரை உயர் பாதுகாப்பு வலயத்தைச் சேர்ந்த பத்தாயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்திருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts