சட்ட விரோதமாகத் தொழில் புரிந்த ஐவருக்கு 89 ஆயிரம் ரூபா அபராதம்

சட்டவிரோதமான இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி கடலட்டை பிடித்த 4 பேரும் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் ஒருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். (more…)

கெற்பேலி மயானத்தை மீட்டுத் தரக் கோரிக்கை; ஜனாதிபதிக்கு மக்கள் கடிதம்

35 வருடகாலமாக மக்களால் பாவிக்கப்பட்டு வந்த கெற்பேலி மயானத்தை இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத்தருமாறு அந்தப்பகுதி மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். (more…)
Ad Widget

நிர்வாகம் கோரினால் பொலிஸாரை அகற்றுவோம்!!,மாணவர் கைது விவகாரத்தில் பொலிஸ் தலையிட முடியாது: எஸ்.எஸ்.பி

பல்கலைக்கழக மாணவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலோ அல்லது உயிர் ஆபத்துக்களையோ விளைவிக்கும் நோக்கில் பொலிஸாரை கடமையில் அமர்த்தவில்லை என்றும், மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கிலேயே பல்கலைக்கழகத்தினை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் (more…)

கோண்டாவிலில் சடலமாக மீட்கப்பட்டவர் பதுளையைச் சேர்ந்தவர்

வெட்டுக் காயங்களுடன் கோண்டாவில் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். பதுளைச் சேர்ந்த ஆர்.டபிள்யூ.டி.நிஷாந்த சம்பத் ராஜபக்ஷ என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். (more…)

இனந்தெரியாத நபர்களின் கத்திக்குத்தில் வயோதிபர் காயம்

யாழ்., புத்தூர் பகுதியில் இனந்தெரியாத நபர்களின் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் வயோதிபர் ஒருவர் அச்சுவேலி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

விபத்தில் தந்தையும் மகளும் படுகாயம்

யாழ். வேம்படி சந்தியில் தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

நேற்றய தினம் மட்டும் 5பேர் கைது

பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று (07-12-2012) 5பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இன்று தெரிவித்தார். (more…)

காணாமல் போனவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

காணாமல் போன வயோதிபர் ஒருவர், கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

பொலிஸாரிடம் மேலும் இரு மாணவர்கள் ஒப்படைப்பு

யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்கள் பொலிஸாரிடம் நேற்றய தினம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். (more…)

யாழ் பல்கலைக்கழக சம்பவம் எனக்கு எதுவும் தெரியாது; யாழ் புதிய பொலீஸ் அத்தியட்சகர்

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக தமக்கு ஒன்றும் தெரியாது என யாழ் பொலீஸ் நிலையத்தின் புதிய சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். எம் ஜிவ்ரி தெரிவித்தார். (more…)

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்குமாறு கோரி யாழ். பல்கலைக்கழகத்தில் அமைதிப் போராட்டம்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தியும், அண்மைக்காலமாக பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டமொன்று இன்று நடாத்தப்பட்டுள்ளது. (more…)

யாழ் பல்கலை மாணவர் பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும்; ஐ.தே.க கோரிக்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

நல்லூரில் தியாகி திலீபனின் நினைவுத் தூபி உடைப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயச் சூழலில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.இந்திய அரசாங்கத்திற்கு எதிராக 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திலீபன் நினைவாக நல்லூர் ஆலயச் சூழலில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. (more…)

யாழில் கைதுகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன!!, இதுவரையில்25 பேர் கைது செய்துள்ளோம்; ரி.ஐ.டி தகவல்

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இதுவரை யாழ்பபாணத்தில் 25 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சந்திரா வாகிஸ்த பி.பி.சிக்கு தெரிவித்துள்ளார். (more…)

மதிலை உடைத்து வீட்டினுள் நுழைந்த வான்!, தாயும் மகனும் படுகாயம்

யாழ். மல்லாகம் சந்தியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயொருவரும் அவரின் 4 வயதுடைய மகனும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யாழிலிருந்து மல்லாகம் நோக்கி சென்ற வான் ஒன்று அங்கு கடமையில் நின்ற பொலிஸாரை கண்டதும் மிக வேகமாக செல்ல முற்பட்டுள்ளது. (more…)

காந்தி சிலை உடைப்பு வழக்கு தள்ளுபடி

யாழ். அரியாலை காந்தி சிலை உடைப்பு சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களின் வழக்கு விசாரணைகளை யாழ். நீதிவான் நீதிமன்றம் நேற்றயதினம் தள்ளுபடி செய்தது.கடந்த யூலை மாதம் 27ஆம் திகதி அரியாலை பகுதியில் உள்ள காந்தி சனசமூக நிலையத்தின் முன்பாக இருந்த சிலை உடைக்கப்பட்டது. (more…)

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதானவர் விடுவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை மூன்று வருடங்களுக்கு பின்னர் யாழ். மேல் நீதிமன்றம் வியாழக்கிழமை விடுதலை செய்துள்ளது. தொல்புரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த செல்வரட்ணம் சசிகரன் (வயது 29) என்பவரே மூன்று வருடங்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (more…)

ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சுகயீன லீவு போராட்டம்

யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் வியாழக்கிழமை 4 மணிநேர சுகயீன லீவு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். (more…)

வெட்டுக் காயத்துடன் ஆணின் சடலம் மீட்பு; கொக்குவில் பகுதியில் நேற்றிரவு பயங்கரம்

கொக்குவில் பகுதியில் நடுத்தர வயது ஆண் ஒருவரின் சடலம் நேற்றிரவு வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் யார் என நேற்றிரவு வரை அடையாளம் காணப்படவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். (more…)

டிசெம்பர் 10 முதல் 17 வரை சுகாதார வாரம்

இம்மாதம் 10ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை தேசிய சுகாதார வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளன நிலையில் இந்த தேசிய வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts