சாவகச்சேரி பிரதேச சபையால் ரூ.310 மில்.செலவில் அபிவிருத்தி; பணிகளை மேற்கொள்ள முன்மொழிவுகள்

சாவகச்சேரி பிரதேச சபையால் அடுத்த வருடத்தில் பிரதேசத்தில் 310 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. (more…)

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட வட பகுதி சட்டத்தரணிகள் தீர்மானம்

பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் அக் கூட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் தமது எதிர்ப்பினை வெளியிடும் நோக்கில் வட பகுதி சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. (more…)
Ad Widget

மீனவர்களின் வாழ்வுரிமைக்காக உண்ணாவிரத போராட்டம் முன்னெடுப்பு

மீனவர்களின் வாழ்வுரிமையை கருத்தில்கொண்டு 'போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு' இன் தலைவர் வி.சகாதேவன் 'எமது மீனவர்களின் வாழ்வுரிமைக்காக' என்ற பெயரில் உண்ணாவிரத போராட்டத்தினை இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளார். (more…)

யாழ்.பல்கலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சி.ஐ.டியால் 3மணிநேரம் விசாரணை

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம்,மாணவர்கைது என்பவற்றைத் தொடர்ந்து பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் தனித்தனியே 3 மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்! பரீட்சைகள் ஆணையாளரின் செய்தி இணைப்பு

2013ஆம் ஆண்டிற்கான க. பொ. த. சாதாரணதரப் பரீட்சைகள் நாளை 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறன. இவ்வருடம் 5 இலட்சத்து 42 ஆயிரத்து 260 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்தார். (more…)

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானம்

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீருடை கொடுப்பனவு, அலுவலகக் கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு போன்றவற்றை அதிகரிப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாத காரணத்தினால் இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. (more…)

விஞ்ஞான மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் விடுதலை

பயங்கரவாத குற்றத் தடுப்பு பொலீசாரினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ மற்றும் விஞ்ஞான பீட மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ பீட பீடாதிபதி பாலகுமாரன் தெரிவித்தார். (more…)

தமிழ் பேசும் மக்களின் வாழ்வைக் கட்டியயழுப்ப இலங்கை அரசின் விசேட நிதி ஒதுக்கீடு தேவை; மாவை. சேனாதிராசா வலியுறுத்து

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையைக் கட்டி யெழுப்புவதற்கு அரசு விசேட நிதி ஒதுக்கீடுகளைச் செய்வது அவசியம் என்று வலியுறுத்தி உள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா. (more…)

மாதகலில் விபத்து இளைஞர் சாவு

உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வவுனியா இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து மாதகலில் சனிக்கிழமை முற் பகல் இடம்பெற்றது. (more…)

புத்தூர் கிழக்கு பிரதேசத்தில் சுமார் 15 பேர் கைது

யாழ். புத்தூர் கிழக்கு பிரதேசத்தில் சுமார் 15 பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கைதான மூன்று யாழ். பல்கலை. மாணவர்களுக்கு 3 மாத கால தடுப்புக்காவல் உத்தரவு

இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் மூவர் மூன்று மாதகாலத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. (more…)

யாழ். நகரில் கழிவுநீர் வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ். நகரப் பகுதியிலுள்ள கழிவு நீர் வாய்க்கால் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது. தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்காலுக்குள் இருந்தே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. (more…)

வல்வெட்டித்துறை கோபுரமொன்றில் புலிக்கொடி ஏற்றிய நபர் கைது

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொலைத்தொடர்புக் கோபுரமொன்றில் புலிக்கொடியை பறக்கவிட்ட நபர் உட்பட மூன்று பேரைக் கைது செய்துள்ளதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். (more…)

வன்னிக்கான பதிலீட்டு ஆசிரிய நியமனத்தில் பாரிய மோசடி!- பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டு

யாழ்ப்பாணத்தலிருந்து வன்னிக்கான பதிலீட்டு ஆசிரிய இடமாற்றத்தில் பல்வேறு குழறுபடிகளும் ஊழல் மோசடிகளும் இடம் பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். (more…)

யுத்தம் நிறைவடைந்த பின் அரசாங்கம் சொல்வது ஒன்று செய்வது வேறொன்று!- ஐ.நா குழுவிடம் யாழ். ஆயர் எடுத்துரைப்பு

புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டாலும் போராட்டம் மீண்டும் தலைதூக்கும்!!; நாடாளுமன்றில் முழங்கினார் சம்பந்தன்

"தமிழர் தாயகப்பகுதிகளை அரசு திட்டமிட்டு முற்றுமுழுதாக இராணுவமயப்படுத்தி வருகிறது. விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அழித்துவிட்டோம் என்றும் அரசு பெருமை பேசுகின்றது. ஆனால், புலிகள் அழிக்கப்பட்டாலும் அங்கு தமிழர்களின் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. எனவே, தமிழர் போராட்டம் ஆத்மார்த்த ரீதியில் மீண்டும் தலைதூக்கும். இவ்வாறு நாடாளுமன்றில் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்....

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 25 பேர் கைது

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 25 பேரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.முகமட ஜெவ்ரி இன்று(7) தெரிவித்தார் யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.. (more…)

2013 இல் நடைமுறைப்படுத்தும் பாடசாலை தவணை அட்டவணை; கல்வி அமைச்சால் வெளியீடு

அடுத்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பாடசாலைத் தவணை அட்டவணை கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது. (more…)

சட்ட விரோதமாகத் தொழில் புரிந்த ஐவருக்கு 89 ஆயிரம் ரூபா அபராதம்

சட்டவிரோதமான இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி கடலட்டை பிடித்த 4 பேரும் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் ஒருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். (more…)

கெற்பேலி மயானத்தை மீட்டுத் தரக் கோரிக்கை; ஜனாதிபதிக்கு மக்கள் கடிதம்

35 வருடகாலமாக மக்களால் பாவிக்கப்பட்டு வந்த கெற்பேலி மயானத்தை இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத்தருமாறு அந்தப்பகுதி மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts