Ad Widget

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்; தா. பாண்டியன் கோரிக்கை

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

மாணவர்களை விடுதலை செய்து பல்கலைச் சூழலையும் கற்றலுக்கு ஏற்றது போல மாற்றுங்கள்; யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் துணைவேந்தரிடம் கோரிக்கை

இராணுவம் மற்றும் பொலிஸாரின் தலையீட்டினை பல்கலைக்கழகத்தில் இருந்து விலக்கி மாணவர்களது கற்றல் நடவடிக்கைக்கு உடனடியாக ஆவண செய்ய வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் துணைவேந்தரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. (more…)
Ad Widget

யாழ். பல்கலை. மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கிழக்கு பல்கலை. மாணவர்கள் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட மாணவர்களின் மீதான தாக்குதலை கண்டிக்கும் முகமாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டும் கண்டன போராட்டம் தற்பொழுது இடம்பெற்று கொண்டிருக்கின்றது. (more…)

பொலிஸ் நிலையமாகிறது பளை சோதனை நிலையம்

பளை பொலிஸ் சோதனை நிலையம் இந்த மாத இறுதிக்குள் பொலிஸ் நிலையமாக செயற்படவுள்ளது. இதுவரை காலமும் பொலிஸ் கனிஷ்ட உத்தியோகத்தர் (சார்ஜன்) தலைமையில் 10 பேருடன் இயங்கிவந்த பொலிஸ் சோதனை நிலையம் விரைவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் 80 உத்தியோகத்தர்களுடன் முழுமையான பொலிஸ் நிலையமாக இயங்கவுள்ளது. (more…)

யாழ்ப்பாணம் கைதடிப் பாலத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

யாழ்ப்பாணம் கைதடிப் பாலத்தில் இன்று காலை 6.30 மணியளவில் இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. (more…)

பல்கலைச் சூழலில் மேலும் இராணுவப் பிரசன்னம்; அச்சத்தில் விடுதி மாணவர்கள்

பல்கலைக்கழக சூழலில் படையினரின் பிரசன்னம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது.பல்கலைக்கழகம் மற்றும் விடுதிச் சூழலில் இராணுவத்தினரின் பிரசன்னம் மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளதனால் விடுதியில் உள்ள மாணவர் மத்தியில் அச்சத்தினை தோற்றிவித்துள்ளது. (more…)

மாணவர்கள் கைதாவதை உடன் தடுத்து நிறுத்த வேண்டும். பொலிஸாரிடம் பல்கலை நிர்வாகம் கோரிக்கை.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 4பேர் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் மாணவர்கள் கைது செய்யப்படுவதனை நிறுத்தல் வேண்டுமென யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேராவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (more…)

யாழ். பல்கலைக்கழக தாக்குதலுக்கு புதிய ஜனநாயக மாக்சிச கட்சி கண்டனம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து இராணுவமும் பொலிஸாரும் நடத்திய இரண்டு நாள்களிலான அராஜகத் தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவையாகும். (more…)

யாழ். பல்கலை மாணவர்கள் இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு!

கோப்பாய் பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இவர்கள் இருவரும் கொழும்புக்கு அழைத்துவரப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். (more…)

கைதான மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள்; த.தே.கூ பொலிஸாரிடம் கோரிக்கை

கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

கூட்டமைப்பும் தமி்ழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து நடாத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களைக் கண்டிக்கும் கண்டன போராட்டத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து எதிர்வரும் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்தும் என தமிழ்தேசியக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது. (more…)

வன்னியில் கைவிட்ட வாகனங்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து விற்பனை; படையினர் ஏலத்தில் விற்றதாக கூறுகிறார் பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா

இறுதிக்கட்டப் போரில் பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்கள் உட்பட சகல வாகனங்களும் இராணுவத்தினரால் ஏலவிற்பனை மூலம் விற்கப்பட்டு வருகின்றன என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. (more…)

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் விசேட வேலைத்திட்டம்

வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலிகாமம் தெற்கு பிரதேசச சபை தவிசாளர் பிரகாஸ் தெரிவித்தார். (more…)

யாழ். பல்கலைக்கழக தாக்குதலுக்கு ”நாம் தமிழர்” கண்டனம்

இலங்கையில் தமிழர் தாயகத்தின் விடுதலைக்காக போராடி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஆர்ப்பாட்டம் இன்றி, அமைதியாகக் கூடி தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்திய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்கள இராணுவத்தின் உளவுப் பிரிவினரும், காவல்துறையினரும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். (more…)

சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டர்கள் பற்றாக்குறை

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதால் சென். ஜோன்ஸ் அம்புலன்ஸுடன் இணைந்து வைத்தியசாலையில் கடமையாற்றும் தொண்டர்களுக்கு ஆளணிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று சென். ஜோன்ஸ் அம்புலன்ஸின் யாழ்.மாவட்ட ஆணையாளர் செ.செல்வரஞ்சன் தெரித்துள்ளார். (more…)

யாழ் கோட்டைக்குள் வரலாற்றுச் சிறப்புக்கள் அடங்கிய கண்காட்சிக்கூடம்

வடக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்று முக்கியமான இடங்கள் சுற்றுலாப்பயணணிகள் அறிந்து கொள்ளும் வகையில் யாழ் கோட்டைக்குள் கண்காட்சி கூடம் அமைக்கப்படவுள்ளது.தொல்லியல் திணைக்களத்தால் இக் கண்காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ் மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்படுத்த முயற்சி: இராணுவப் பேச்சாளர்

யாழ்ப்பாண மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார். (more…)

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மாவீரர் தின நிகழ்வுகள் நிறுத்தப்பட்டன: பாதுகாப்பு படையினர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படையிலேயே அண்மையில் வடக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவீரர் தின நிகழ்வுகளை தடுத்ததாக சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். (more…)

21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை ! ரூ.47,000 தண்டம் வசூல்

21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை மற்றும் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்த 24 வர்த்தகர்களுக்கு 47,500 ரூபா தண்டப்பணம், யாழ். மற்றும் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றங்களினால் அறவிடப்பட்டுள்ளதாக யாழ். மதுவரி நிலைய பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் தெரிவித்தார். (more…)

முச்சக்கரவண்டியில் மூன்று பேருக்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு கோரிக்கை

முச்சக்கரவண்டியில் மூன்று பேருக்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு யாழ். பொலிஸ் நிலைய பிரதிப் பொலிஸ் அத்தியட்சசகர் குணசேகர வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts