யாழ்.குடாநாட்டில் கடந்த 10 வருடங்களில் இந்த வருடமே மிகக் குறைந்த மழைவீழ்ச்சி

யாழ்.குடாநாட்டில் கடந்த 10 வருடங்களில் இந்த வருடமே மிகக் குறைந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர அதிகாரி த.பிரதீபன் தெரிவித்தார். இந்த வருடத்தில் கடந்த 12 மாதங்களில் நேற்றுக் காலை 8.30 மணி வரையில் 725.7 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது. (more…)

ஊழியர் சேமலாப நிதி செலுத்த தவறிய நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

ஊழியர் சேமலாப நிதி செலுத்ததவறிய 8 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.டிசெம்பர் மாத கலப்பகுதியில் யாழ். மற்றும் கிளிநொச்சி, வவுனியா பகுதியில் வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் மேற்கொண்ட பரிசீலணையின் (more…)
Ad Widget

தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்கு விளக்கேற்றி நினைவு கூருவதற்கு தடை ;அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் தமது உறவுகளுக்காகவும், உடன் பிறப்புகளுக்காகவும் விளக்கேற்றி நினைவு கூருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. ஆனால் அதனை அவர்கள் தமது வீடுகளில் செய்ய வேண்டும் என்றார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. (more…)

யாழ். படைத்தளபதி ஹத்துருசிங்கவின் அழைப்பை நிராகரித்த பீடாதிபதிகள்!

வெள்ளிக்கிழமை பலாலியில் மாநாடொன்றை நடத்த யாழ். மாவட்ட இராணுவத்தளபதி ஹத்துருசிங்க விடுத்த அழைப்பினை பல்கலைக்கழக பீடாதிபதிகள் முற்றாக நிராகரித்து விட்டனர்.அத்துடன், பலாலிக்கு சென்று பேச்சு நடத்த வேண்டிய தேவை தமக்கில்லையென தெரிவித்துள்ள பீடாதிபதிகள் மீண்டும் குடாநாட்டில் இராணுவ ஆட்சியொன்றை முழுமையாக கொண்டுவர (more…)

காலை 7 மணிக்கு ஆரம்பமான உண்ணாவிரதம்

கைதுகளுக்கும் காரணமின்றிய தடுத்து வைத்தலுக்கும் எதிராக தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மேடையிலேயே உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது. (more…)

யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர் வாள் வெட்டுக்கு இலக்கு

யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று இரவு பணியை முடித்துக் கொண்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்த சமயம் கந்தர்மடம் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் இவர் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார். (more…)

மேலும் நான்கு பேர் கைது என முறைப்பாடு , மொத்தம் 43 ஆக உயர்வு

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்து இதுவரையில் 43 முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையில் பதிவாகியுள்ளதாகப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டமளிப்பு விழா

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டமளிப்பு விழா இன்று காலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.'ஆறுதல்' நிறுவனத்தின் ஏற்பாட்டில், நிறுவன இணைப்பாளர் சுந்தரம் திவகலால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, (more…)

10 இற்கும் மேற்பட்டோருக்கு வாராந்தம் டெங்கு தொற்று

தற்போது மழை வீழ்ச்சி குறைவடைந்திருந்தாலும் வாராந்தம் 10 இற்கும் மேற்பட்டோர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்படுகின்றனர். எனவே டெங்கு பற்றி விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (more…)

பல்கலை மாணவர்களை விடுதலை செய்யுங்கள்; மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை

பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.குறித்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட வேண்டும் அல்லது அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென (more…)

வெள்ள நிலைமை காரணமாக புத்தளம், குருநாகல், தம்புள்ள ஆகிய பிரதேசங்கள் ஊடான வட பகுதிக்கான வாகன போக்குவரத்தும் துண்டிப்பு

நாட்டில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதோடு மீட்புப் பணியில் பொலிஸாரும், முப்படைகளும் தீவிரமாக செயற்பட்டு வருவதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)

வடக்கு மாகாண நிகழ்வில் சிங்களத்தில் தேசிய கீதம்

வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கிண்ணத்துக்காக நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியின் போது சிங்கள மொழியில் தேசிய கீதம் ஒலிக்க விடப்பட்டது.வடக்குமாகாண அமைச்சுகளுக்கிடையிலான ஆளுநர் கிண்ணப் போட்டிகளின் இறுதி ஆட்டங்கள் நல்லூர் ஸ்தான பாடசாலையில் நேற்று இடம்பெற்றன. (more…)

பன்றி வெடி வெடித்ததில் குடும்பஸ்தர் பலி

பன்றி வெடி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம் வரணி பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.இச்சம்பவத்தில், இடைக்குறிச்சி வரணி பகுதியைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையரான கந்தசாமி கந்தராசா (காந்தன்) (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். (more…)

வடமராட்சியில் பற்றைக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வடமராட்சி பிரதேசத்தின் அல்வாய் கிழக்கு, மாயக்கைப் பகுதியில் பற்றைக் காணிக்குள் இருந்து காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் பருத்தித்துறைப் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டது.குறித்த சடலம் பருத்தித்துறை வி.எம்.றோட்டைச் சேர்ந்த குமாரசாமி கருணாநிதி (வயது 47) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. (more…)

சகோதரியின் காணி மோசடி; சகோதரன் கைது

யாழ்ப்பாணம், கொக்குவில் கிழக்கு, பகுதியில் உள்ள காணியொன்றை மோசடி செய்து விற்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரை குற்றப்புலனாய்வு பொலிஸார் கைது செய்துள்ளனர்.பிரான்ஸில் உள்ள சகோதரியின் காணியை மோசடி செய்தார் என்று கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கிணங்கவே குறித்த சந்தேகநபர் புதன் இரவு கைது செய்யப்பட்டுள்ளார் (more…)

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றின் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் அநுராதபுரம் இராஜாங்கனைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சமயம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

சட்டவிரோத நடைபாதை வியாபாரத்தை தடைசெய்யவும்: டக்ளஸ் தேவானந்தா

நிரந்தர வர்த்தக நிலையங்களிற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத நடைபாதை வியாபாரத்தினை தடைசெய்யுமாறு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் தமிழ்,பௌத்த அறநெறி பாடசாலைக்கு கணினி கையளிப்பு

யாழ்.உடுவில் நந்தாறாம தமிழ், பௌத்த அறநெறி பாடசாலைக்கு கணினி மற்றும் பிரின்டர் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று இரவு இடம்பெற்றது.வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் இவ் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன. (more…)

எமது தாயகத்தில் இருந்த ஆக்கிரமிப்பு படைகள் முற்றாக வெளியேற வேண்டும்;சிவாஜிலிங்கம்

தமிழ்ப் பிரதேசத்தில் இராணுவம் நிலை கொண்டிப்பது குறித்த விவாதங்கள் தமிழ் அரசியல் வட்டாரங்களில் சமீப காலங்களாக இடம்பெற்று வருகின்றதாக கூறி தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்பும் நோக்கத்தில் (more…)

தமிழ் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு துண்டுப்பிரசுரங்கள் மூலம் இலங்கை தமிழரசு கட்சியினர் வேண்டுகோள்

கைதுகளுக்கும் காரணமின்றிய தடுத்து வைத்தலுக்கும் எதிராக நடாத்தவுள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு மக்களை அழைக்கும் வகையில் இலங்கை தமிழரசு கட்சியினரால் யாழ். நகரில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் காரணமற்ற கைதுகளை, (more…)
Loading posts...

All posts loaded

No more posts