- Wednesday
- January 15th, 2025
இலங்கை நிப்போன் கல்வி, கலாசார நிலையத்தினால் 41 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்றுக யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.சுமார் 5000ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் இதன்போது வழங்கப்பட்டன. (more…)
யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.யாழ். போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு கந்தர்மடம் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் வாள் வெட்டுக்கு இலக்கானதை கண்டித்து (more…)
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு உதவிகளை செய்யும் முகமாக யாழ் மாவட்ட மக்களிடம் இருந்து சிவமானிட விடியற்கழகம் நிவாரணப்பொருட்களை சேகரித்து வருகின்றது.அவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்களை எதிர்வரும் புதன்கிழமை அங்கு கொண்டு (more…)
‘சார்க்’ அமைப்பினால் அதன் 28ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வுக்கட்டுரைப்போட்டியில் யாழ். இந்துக்கல்லுரி மாணவர்களாகிய செல்வன் சிறிஸ்கந்தராஜா சிவஸ்கந்தஸ்ரி முதலாம் இடத்தையும், செல்வன் ஜீவரட்ணராஜா சஜீவன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர். (more…)
தென்மராட்சி அல்லாரை தம்பு தோட்டப் படைமுகாமில் தினமும் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியினால் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் உயிர் ஆபத்துக்களை எதிர்நோக்கும் அச்சத்துடன் படகுகளில் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது. (more…)
2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கே இந்திய வீட்டுத்திட்டம் அடுத்த கட்டத்தில் வழங்கப்படவுள்ளது.இவர்களில் புள்ளித்திட்ட அடிப்படையில் 10 இற்கு மேல் பெற்ற வறுமையானவர்களுக்கே வீட்டுத் திட்டப் பணம் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது. (more…)
கைது செய்யப்பட்டு வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் தமது பிள்ளைகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர். (more…)
தமிழர்களும், பல்கலைக்கழக மாணவர்களுமே வளர்த்து விட்டதாக படைத்தரப்பும் அரசும் கூறினாலும், சிங்களவர்களும், பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளும் சேர்ந்தே விடுதலைப் புலிகளை வளர்த்து விட்டனர். இவ்வாறு கணிதவியல் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவுக்கு நேரில் எடுத்துரைத்தார். (more…)
வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றவேண்டியிருப்பதாலும் புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காகவும் யாழில் 9 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. (more…)
யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீடங்களும் கல்விச் செயற்பாட்டினை புறக்கணிக்கும் நிலையில் மருத்துவ பீடம் கற்றல் செயற்பாட்டினை மேற்கொள்வது அச்சுறுத்தலின் காரணமே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)
கொடிகாமம், அல்லாரை, இராமாவில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிரந்த காணி நேற்று அப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டது. யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க நேற்று மதியம் 3 மணியளவில் இந்தக் காணியை கையளித்தார். (more…)
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 37பேர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.மேலும் சட்டவிரோத மது உற்பத்தி செய்த நபர் ஒருவரும், கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்த இரண்டு பேரும், (more…)
கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் எதுவுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். (more…)
பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யும் வரை யாழ் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படமாட்டாது என மாணவர்கள் காத்திருப்பது வெறும் கனவாகவே இருக்கும் என யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.யாழ் பல்கலைக்கழக சமூகத்திற்கும் யாழ் மாவட்ட கட்டளை தளபதிக்கும் இடையில் இன்று காலை 10 மணியளவில் (more…)
யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் ஒருவர் நேற்றைய தினம் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கிலே இவ்வாறு பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் (more…)
தமிழ் அரசியல் கட்சிகளின் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் 9 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்களை, தமிழ் அரசியல் கைதிகளை மற்றும் சரணடைந்த போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட வேண்டும், (more…)
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.அதேவேளை, மாத கொடுப்பனவினை அதிகரிப்பதற்கும், சீருடைகள், துவிச்சக்கரவண்டிகள் (more…)
யாழ் இராணுவத் தளபதியினை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையிலான பல்கலைக்கழக சமுகம் இன்றைய தினம் சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டு வருகின்றது.இன்று காலை 10 மணியளவில் பலாலி படைத் தலமையகத்தில் இவ் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
கொடிகாமம் சந்தை பகுதியில் மலகூட கழிவு நீர் வீதியில்..! பிரதேசசபைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
சாவகச்சேரி பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மாடியிலிருந்து இறங்க விடாமல் தடுத்து கொடிகாமம் நகர்ப் பகுதி வர்த்தகர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது: (more…)
Loading posts...
All posts loaded
No more posts