- Wednesday
- January 15th, 2025
தொடர்மழையை அடுத்து வடக்கில் தண்ணீர் மூலமாகப் பரவும் நோய்களின் தொற்று தீவிரமடையலாம் என்பதால் உணவு, குடிதண்ணீர் என்பவற்றின் சுகாதாரத்தைப் பேணுமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: (more…)
பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்தினர் தம்மிடம் நடத்திய விசாரணைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய கேள்விகள் எவையும் எழுப்பப்படவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை (more…)
போப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் இருந்த பனை அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான காணி இராணுவத்திற்கென பனை அபிவிருத்திச் சபையால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.இந்தக்காணியை படையினர் எடுத்துக் கொள்ளலாம் என்று எழுத்து மூலமாக பனை அபிவிருத்திச் சபை தனது (more…)
இறந்த உறவுகளுக்காக தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.பட்டதாரி பயிலுனர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்வதற்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். (more…)
யாழ். நகரில் இருந்து இரவு 9 மணிக்கு கடைசி பஸ்சேவை இடம் பெறக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கை ஜனநாயக தொழிலாளர் கட்சியின் தலைவர் எஸ். சத்தியேந்திரா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். (more…)
பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் தங்களது பிரதேச அபிவிருத்துக்காக பாடுபட வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.பட்டதாரி பயிலுனர்கள் 514 பேரை பொருளாதர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைந்துக் கொள்ளப்படுவதற்கான (more…)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் 45 பேர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினரிடம் சரணடையாது நீண்டகாலமாக மறைந்திருந்ததாகக் கூறப்படும் உறுப்பினர்களையே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (more…)
வடக்கு, கிழக்கு உட்பட 9 மாவட்டங்களில் மாற்று வலுவுள்ளோருக்கு அடுத்த ஆண்டு விசேட தொழிற்பயிற்சி வழங்கி அவர்கள் வருமானத்தை ஈட்டும் வகையில் செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.இதற்காக இலங்கை அரசும், உலக வங்கியும் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளன. (more…)
கைது செய்யப்பட்டு வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களான (more…)
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வர்ணப்பூச்சு வேலைகளிற்காக வெளிநாட்டுப் பொது நிறுவனம் ஒன்றிடம் இருந்து ரூபா 10 இலட்சம் நிதியுதவி கிடைக்கப் பெற்றுள்ளது என்று யாழ்.மாநகர சபைத் தலைவர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். (more…)
2009ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையான 4 ஆண்டுப் பகுதியில் யாழ்.மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் வீதம் கடந்த காலங்களைவிட குறைவாகவுள்ளதாக யாழ்.மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் அ.பரஞ்சோதி தெரிவித்தார். (more…)
கடந்த சில நாட்களாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் நிகழ்ந்து வரும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். மாநகர சபையினால் நிதி உதவி வழங்குவதற்கான பிரேரணையை திங்கட்கிழமை சபையில் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா முன்வைத்தார். (more…)
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பை தடுக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் திங்கட்கிழமை இரவு இந்த கைகலப்பு இடம்பெற்றது. (more…)
3ஏ மூவிஸ் நிறுவனத்தினால் விளையாட்டுப்போட்டிகள் மற்றும் குறும்படங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வுகள் நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.யாழ்ப்பாண மாவட்டத்தில் கால்ப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், ஹொக்கி, தாச்சி ஆகிய (more…)
யாழ். மாவட்டத்தில் இனிமேல் யாராவது கைது செய்யப்படின் அதற்கு முன்னர் அவர்களது குடும்பத்தினருக்கு உடனடியாகவே தெரியப்படுத்தப்படும். அதன் பின்னரே அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா. (more…)
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கின்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சங்கத்தின் தலைவர் அமிர்தலிங்கம் ராசகுமாரனை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்துள்ளது. (more…)
யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலையடுத்து மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.அரியாலை மற்றும் குருநகர் ஆகிய இடங்களைச்சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவம் (more…)
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் அவரது தாயார் சனிக்கிழமை முறைப்பாடு செய்துள்ளார். ஹலோ ஸ்ரெட் எனப்படும் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணியாற்றுகின்ற நற்குணராஜா சாரங்கன் (வயது 22) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். (more…)
யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் டெங்கு காய்ச்சலினால் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். பராளை வீதியச் சேர்ந்த தர்ஷிகா (வயது 11) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மூளாய் வைத்தியசாலையிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையிலேயே இந்த மாணவி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Loading posts...
All posts loaded
No more posts