பௌர்ணமி தினங்கள் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கவில்லை

அரசாங்க நாட்காட்டியில் பௌர்ணமி தினங்கள் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை என உள்ளக நிறுவன ஊழியர் சங்கங்களின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்தார்.இதேவேளை பொதுபல சேனா அமைப்பு இதே குற்றாச்சாட்டை முன்வைத்துள்ளது. (more…)

இலங்கையில் விவாக பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு

விவாகப் பதிவுக் கட்டணங்களை இன்று 2013 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அதிகரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி இதுவரை நடைமுறையில் ஆயிரம் ரூபாவாக இருந்த விவாகப் பதிவுக் கட்டணம் ஐயாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பதற்கு தீர்மானித்துள்ளது. (more…)
Ad Widget

மின்சாரம் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு

யாழ். சுழிபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விளையாடுவதற்காக சென்ற குறித்த இளைஞன் சனசமூக நிலையத்தில் மின்குமிழ் ஒன்றை பொருத்துவதற்கு முற்பட்ட வேளையிலேயே மின்சாரம் தாக்கி நேற்று மாலை 5 மணியளவில் பலியாகியுள்ளார். (more…)

கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு யாழ். பல்கலை நிர்வாகம் கோரிக்கை; மாணவர் மறுப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான கூட்டமொன்று, கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையில் நேற்று பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான (more…)

யாழ். தனியார் பஸ் சேவை வழமைக்கு திரும்பியது

கைகலப்பில் ஈடுபட்ட பஸ் சாரதிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்ததை தொடர்ந்து தனியார் பஸ் சேவைகள் நேற்று 3 மணியுடன் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணைய தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்தார். (more…)

இடமாற்றத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வெளிமாவட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கடமைக்கு சென்ற ஆசிரியர்கள் தமது சொந்த இடங்களில் கடமையாற்றுவதற்கு அனுமதிகள் மறுக்கப்படுவதாக கூறி ஆசியர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக (more…)

கரையொதுங்கிய இந்திய ரோலர் படகு, மீனவர்கள் திருப்பி அனுப்பல்

இயந்திர கோளாறு காரணமாக யாழ். மாதகல் கடற் பரப்பில் கரையொதுங்கிய இந்திய ரோலர் படகு மற்றும் 7 மீனவர்களும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ.எமிலியாம்பிள்ளை இன்று தெரிவித்தார். (more…)

சுன்னாகம் ப.நோ.கூ.சங்க ஊழியர்கள் வேலைநிறுத்தம்; கடைகள் பூட்டு

சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர்.தங்களுடைய தீர்மானங்கள் தொடர்பில் சங்கத் தலைவருக்கும் பணிப்பாளர் சபைக்கும் அறிவித்துள்ளார்கள். சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கக் கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. (more…)

15 வயது சிறுவனுக்கு 14 நாள் விளக்கமறியல்

யாழ். பாசையூர் பகுதியில் 23 வயது இளைஞனை கத்தியால் குத்தி கொலை செய்த 15 வயதுடைய சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி க.சிவகுமார் முன்னிலையில் குறித்த சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். (more…)

யாழ். பல்கலை வளாகத்திலிருந்து பொலிஸாரை விலக்குவோம்: எஸ்.எஸ்.பி

யாழ். பல்கலைக்கழக வளாகத்தினை சுற்றி நிறுத்தப்பட்டிருக்கின்ற பொலிஸாரை அங்கிருந்து விலக்கிக்கொள்வதற்கு கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் இன்று திங்கட்கிழமை மாலைவேளைக்குள் தீர்மானம் ஒன்று எட்டப்படும் என்றும் யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். மொஹமட் ஜெவ்ரி தெரிவித்தார். (more…)

யாழில் தனியார் பஸ்கள் பணிப் புறக்கணிப்பு; பொதுமக்கள் சிரமம்

யாழ்ப்பாணத்தில் தனியார் பஸ்கள் இன்று முதல் ஆரம்பித்த பகிஸ்கரிப்பினால் ஆங்கில புதுவருட கொள்வனவில் ஈடுபட பல இடங்களில் இருந்து யாழ்ப்பாண நகருக்கு வருகை தரும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் இன்று காபொ.த சாதாரண தரப் பரீட்சையின் வினாத்தாள் மதிப்பிடும் (more…)

புனர்வாழ்வில் இருந்து நழுவிய முன்னாள் போராளிகள் உன்னிப்பான கண்காணிப்பில்; யாழ். கட்டளைத் தளபதி

தாம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார்கள் என்பதை மறைத்து புனர்வாழ்வு பெறாமல் நழுவிய ஆயிரம் முன்னாள் போராளிகளை படைப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.ஏனெனில் இவ்வாறானவர்களே வடக்கில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. (more…)

சுற்றுலாத் துறையினருடன் இணைய ஆர்வமுடையோர் இணையலாம்

வடமாகாணத்தைச் சேர்ந்த எவரும் முதலீட்டாளர்களாக இணைய முடியும். சுற்றுலாத்துறை ஊடாக வருமானத்தைப் பெற்றுக்கொள்ள ஆர்வமுடைய முதலீட்டாளர்கள் வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தில் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ளலாம். (more…)

மாதா கோவிலில் திருட்டு

யாழ்ப்பாணம் சில்லாலை புனித கதிரை அன்ணை ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.மேற்படி பகுதியில் உள்ள மாத ஆலயத்தின் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் உண்டியல் பணம், மாதவின் முடி, றொட்டி, வைன் போன்றவற்றினை களவாடிச் சென்றுள்ளனர். (more…)

நயினாதீவுப் பிரதேசத்துக்கு மீண்டும் சுழற்சிமுறையில் மின்

நயினாதீவு பிரதேசத்துக்கு மீண்டும் சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது காலநிலை வேறுபாட்டால் மின்பிறப்பாக்கிகளுக்குரிய டீசலை கொண்டு செல்வதில் நெருக்கடி நிலவுகிறது. இதனால் மின் விநியோகத்தில் தடங்கல் நிலை ஏற்பட்டுள்ளது. (more…)

மருத்துவர் சிவசங்கர் மாங்குளம் பொலிஸில்

மருத்துவர் சிவசங்கர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகளின் கொழும்புச் சங்கம் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக் கோனிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

வடமராட்சி கிழக்கு கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் சுழியில் சிக்கி மரணம்!

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் உள்ள மணற்காட்டு கிராமத்தில் கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 16 வயது மாணவன் ஒருவன் சுழியில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இப்பரிதாபகரமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. (more…)

யாழ். தனியார் பஸ்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு

யாழ். மாவட்ட சிற்றூர்த்தி சேவைச் சங்கங்கள் இன்று முதல் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணைய தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்துள்ளார். (more…)

கத்திக் குத்தில் இளைஞர் பலி; 15 வயது சிறுவன் கைது

யாழ். பாஷையூர் பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவமொன்றில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவனை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் பாசையூர், மூன்றாம் குறுக்குதெருவை சேர்ந்த ஏ.பி.தனுஷ் தயாளன் என்பவரே உயிரிழந்துள்ளார். (more…)

வைத்தியர் திருமாறன் அவர்கள் கொழும்பிற்கு இடமாற்றம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய காது, மூக்கு மற்றும் தொண்டை தொடர்பிலான சத்திரசிகிச்சை நிபுணர் திருமாறன் தற்காலிக இடமாற்றம்பெற்று கொழும்பிற்கு சென்றுள்ளதாக யாழ். அரச வைத்திய சங்க தலைவர் எஸ்.நிமலன் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts