வல்வெட்டித்துறையின் இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தோற்கடிப்பு.

வல்வெட்டித்துறையின் இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை நகர சபைத் தலைவர் ந.அனந்தராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் வாக்கெடுப்பிற்காக சமர்ப்பிக்கப்பட்ட போது தலைவர் மட்டும் ஆதரவளித்த நிலையில் (more…)

2 நாள்களில் 4 பேருக்கு டெங்கு நோய்

கடந்த இரண்டு நாள் களில் நான்குபேர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப் பட்டு சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்றுப் புதன்கிழமையும் நேற்றுமுன்தினம் செவ் வாய்க்கிழமையும் உடுவில், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நான்கு பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
Ad Widget

சிறுமியின் கொலையைக் கண்டித்து இன்று மண்டை தீவில் பெரும் போராட்டம்

மண்டைதீவில் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் கொலையைக் கண்டித்து இன்று பெரும் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டம் இன்று காலை மண்டை தீவு பிரதேச சபையின் உப அலுவலகத்துக்கு அண்மையில் நடைபெறவுள்ளது. (more…)

யாழ்.வாக்காளர் எண்ணிக்கை 13 ஆயிரம் பேரால் அதிகரிப்பு

யாழ்.தேர்தல் மாவட்டத்தின் 2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை விடக் கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் 12 ஆயிரத்து 948 பேர் புதிய வாக்காளர்களாகப் பதிவாகியுள்ளனர். (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 திடீர்ச் சாவுகள் எப்படி நடந்தன்? ஆராயக் கேட்டு நீதிமன்றில் பொதுநல வழக்கு

உயிரிழப்புகள் அதிகரிக்கும்போது விசாரணை செய்து சுகாதார அமைச்சுக்கு அறிவித்துத் தேவையான மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த உயிரிழப்புகள் தொடர்பாக வைத்தியசாலைப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்கள் உரிய விசாரணை நடத்தவேண்டும். (more…)

யாழ். மாணவர்களை விடுதலை செய்யுங்கள்!; பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம்

அரசாங்கம் இலங்கையை கேலிக் கூத்தாக்கி விடக்கூடாது. அரசாங்கம் மக்களின் உரிமைகளை மீறுகின்றது. என சர்வதேச சமூகம் குற்றஞ்சுமத்துவதற்கு இடமளிக்கக்கூடாது. என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்தது. தடுத்து வைத்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் அதிகாரம் வாய்ந்தோர் விடுவிப்பதன் மூலம் (more…)

யாழ்.பல்கலை. மாணவர்களின் கைது நடவடிக்கைகள் கவலையளிக்கின்றது!- இராணுவ கிறிஸ்மஸ் நிகழ்வில் யாழ்.ஆயர் தெரிவிப்பு

யாழ்.பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளும் மாணவர்களின் கைது நடவடிக்கைகளும் கவலையளிப்பதாக யாழ். ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.யாழ். மாவட்ட இராணுவக் கட்டளையகம் ஒழுங்கு செய்த 2012ஆம் ஆண்டிற்கான கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வின் (more…)

பழைய வரலாற்றைத் திருப்பி உருவாக்காமல், உங்கள் படிப்பில் அக்கறை செலுத்தவும்;யாழ் இளவரசன் கனகராஜா!

இந்த புதிய ஆண்டு அனைவருக்கும் சமாதானம் சுபீட்சத்தை சந்தோஷத்தை கொண்டு வரவேண்டும் என வாழ்த்துத் தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பற்றியும் யாழ் றோயல் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசன் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் றேமியஸ் கனகராஜா தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண ஆளுநரின் செயலாளரிடம் குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து முன்னாள் இந்து கலாசார அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரர் துவாரகேஸ்வரன் மீது அசிற் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் செயலாளரிடம் குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (more…)

யாழ்.வைத்தியசாலை புற்றுநோய் வைத்திய நிபுணர் ஜெயக்குமாரனின் வீட்டின் மீது மீண்டும் தாக்குதல் முயற்சி

யாழ்.போதனா வைத்தியசாலை புற்றுநோய் வைத்திய நிபுணர் வைத்தியக் கலாநிதி என்.ஜெயக்குமாரனின் வீட்டின் மீது மீண்டும் தாக்குதல் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் இத்தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

இந்திய வியாபாரிகள் யாழில் வியாபாரம் செய்ய தடை

யாழ். மாநகர சபை எல்லைக்குள் இந்திய வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளது என மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.அத்துடன் நடை பாதை வியாபாரமும் யாழ். மேயரினால் தடைசெய்யப்பட்டுள்ளது என யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார். (more…)

இந்து- கிறிஸ்தவ சமயங்கள் சார்ந்த மக்களுக்கிடையே முரண்பாடு!

யாழ். குப்பிளான் பகுதியில் இந்து - கிறிஸ்தவ சமயங்கள் சார்ந்த மக்களுக்கிடையில் தேவாலயம் ஒன்று அமைவது தொடர்பாக கடுமையான முரண்பாடு நிலவிவரும் நிலையில், இந்து மதம் சார்ந்த மக்கள் நேற்று காலை அப்பகுதியில் போராட்டம் ஒன்றினை நடத்தியிருக்கின்றனர். (more…)

நல்லூர் ஆலய முன்றலில் பதிதாக காவலரண் அமைத்து காவலில் இருக்கும் இராணுவத்தினர்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய முன்றலில் திடீரென இராணுவ கவலரண் ஒன்று அமைக்கப்பட்டு அங்கு இராணுவத்தினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.நேற்று வருடப்பிறப்பாகையால் ஆலயத்துக்குச் சென்ற பக்தர்கள் திடீரென ஆலயச் சூழலில் இராணுவக் காவலரண் அமைக்கப்பட்டுள்ளமை கண்டு அதிர்ச்சியடைந்தனர். (more…)

இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் இணைக்க ஏற்பாடு

பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய 490 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டு மீண்டும் பாடசாலைகளில் இணைப்பதற்கான நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேசிய நன்னடத்தை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (more…)

வட மாகாண சபையின் புதுவருட ஆரம்ப நிகழ்வுகள் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது

வட மாகாண சபையின் புதுவருட ஆரம்ப நிகழ்ச்சிகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் 01 ஜனவரி 2013 அன்று காலை வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கொடியேற்றல் நிகழ்வினை அடுத்து இரண்டு நிமிட வணக்கத்துடன் மங்கள விளக்கேற்றல் நடைபெற்றது. (more…)

யாழில் பிரபல போதைப் பொருள் விநியோகஸ்தர் ஒருவர் கைது

யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில், பிரபல போதைப்பொருள் விநியோகஸ்தர் ஒருவரை யாழ். நகரில் வைத்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.புத்தளத்தைச் சேர்ந்த முஸ்லிம் இனத்தவரான இவர் (more…)

உயர்கல்வி அமைச்சருடன் பல்கலைக் குழு நாளை சந்திப்பு

யாழ். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது குறித்து பல்கலை நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் நாளை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளனர்.யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் அனைத்து பீடங்களின் பீடாதிபதிகளும் இந்தக் குழுவில் அடங்குகின்றனர். (more…)

கோப்பாய் விபத்தில் இருவர் காயம்

யாழ். கோப்பாய் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவமொன்றில் இருவர் காயமடைந்துள்ளனர். மானிப்பாய் வீதியில் இருந்து வருகை தந்த பவுசர் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் இருந்த வருகை தந்த மோட்டார் சைக்கிளும் கோப்பாய் சந்தியை கடக்க முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது. (more…)

யாழ். பல்கலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் முற்றாக நீக்கம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கடமைக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரை அங்கிருந்து விலக்கியுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெவ்ரி தெரிவித்தார்.பொலிஸ் திணைக்களத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் (more…)

காஸ், மின்கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்

காஸ் மற்றும் மின்கட்டணம் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவித்துள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமையால், காஸ் மற்றும் மின்கட்டணம் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகரிக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts