தங்கம்மா அப்பாக்குட்டியின் 88ஆவது பிறந்த தின அறக்கொடை விழா

சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 88ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அறக்கொடை விழா இன்று தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மண்டபத்தில் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது. (more…)

வடமாகாண பிரதித் தேர்தல் ஆணையாளராக புதியவர் நியமனம்

வடமாகாண பிரதித் தேர்தல் ஆணையாளராக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ். அச்சுதன் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் இன்று தெரிவித்தார். (more…)
Ad Widget

யாழ். வாக்காளர் இடாப்பு பொதுமக்கள் பார்வைக்கு

2012ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு பிரதிகள் ஒவ்வொரு பிரதேச கிராம அலுவலர் பிரிவுளிலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் இன்று தெரிவித்தார். (more…)

யாழ். பல்கலை நாளை ஆரம்பம்

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை நாளை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவ ஆலோசகர் புஸ்பரட்ணம் தெரிவித்தார்.யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரியரட்ணம் தலைமையில் (more…)

சுன்னாகத்தில் பொலிஸ் ஜீப் மீது கல்வீச்சு தாக்குதல்

வசாவிளான் சுதந்திரபுரம் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரின் ஜீப் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள குற்றவாளி ஒருவரை கைது செய்வதற்காக சுன்னாகம் பொலிஸார் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சென்றுள்ளனர். (more…)

இளைஞர் குழு மேற்கொண்ட தாக்குதலில் தேநீர் கடை ஊழியர்கள் காயம்

புன்னாலைக்கட்டுவன், வடக்குச்சந்தியில் உள்ள தேனீர் கடையொன்றின் மீது இளைஞர் குழு ஒன்று மது போதையில் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக கடையில் பணிபுரியும் இருவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. (more…)

கைதான பல்கலை. மாணவர்கள் பொங்கலுக்கு முன் விடுதலை?; உயர்கல்வி அமைச்சர் தகவல்

தைப்பொங்கல் தினத்தன்று யாழ். பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படாவிட்டால் அதனை மூடுவதற்கு தீர்மானித்துள்ளோம். இதேவேளை கைதாகியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படக் கூடும் என நம்புகிறேன் இவ்வாறு உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு மாகாணத்தில் 2011 இல் மட்டும் 38 ஆயிரம் மாணவர்கள் இடைவிலகினர்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னர் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2011 ஆம் ஆண்டில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளனர். (more…)

மீன்பிடிக்கச் சென்றவர் சுழியில் சிக்கி காணாமல் போயுள்ளார்: வடமராட்சியில் சம்பவம்

வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கட்டு மரத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சுழியில் அகப்பட்டுக் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளளது. இதில் ஆழியவளையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மயில்வாகனம் துரைசிங்கம் (more…)

யாழ். ஓஸ்மானியா கல்லூரி அதிபர் இடமாற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

யாழ். ஓஸ்மானியா கல்லூரி அதிபரை இடமாற்ற வேண்டாம் என கோரி நாவாந்துறை பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாகாண கல்வி அமைச்சினால் இடமாற்றம் தொடர்பிலான கடிதம் ஓஸ்மானியா கல்லூரி அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், (more…)

வடமாகாண ஆளுநரின் செயலாளர் பதவி நீக்கம்?

வடமாகாண ஆளுநர் சந்திரசிறியின் பிரத்தியே செயலாளர் சுமித் ஜெயக்கொடி உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் தம்பியும் ஈஸ்வரன் ரேடர்ஸ் நிறுவன உரிமையாளருமாகிய துவாரகேஸ்வரன் மீது (more…)

யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரியாக இதுவரையில் எவரும் நியமிக்கப்படவில்லை

யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரியாக கடமையாற்றிவந்த திருமதி ஏ.எவ்.ஜே.ரூபசிங்கம்  அவர்கள் கடந்த நவம்பர் 26ஆம் திகதி ஓய்வுபெற்றதிலிருந்து இதுவரையில் புதிய யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரி எவரும் நியமிக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

தனியார் மாணவர்களும் தலைமைத்துவ பயிற்சியை கோருகின்றனர்

தலைமைத்துவ பயிற்சியில் பங்குபெறுவதற்கு தம்மையும் அனுமதிக்குமாறு தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களும் கோருவதாகவும் இதற்காக அவர்கள், பிரத்தியேக கட்டணத்தை செலுத்தவதற்கு தயாராக உள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி 15 ஆம் திகதி திறப்பு

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி எதிர்வரும் 15 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவனாந்தராஜா தெரிவித்தார். (more…)

யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பிரிவிற்கான காரியாலயம் திறந்து வைப்பு

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணி வகுப்பு நிகழ்வு இன்று சனிக்கிழநைடைபெற்றது.கோப்பாய் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஜெயக்கொடியின் ஏற்பாட்டில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணவீர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா கலந்துகொண்டார்.  (more…)

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது; 3 வாள்கள் மீட்பு

காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அந்தேக சபரின் வீட்டில் இருந்து 3 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.ஈ.எரிக் பெரேரா தெரிவித்தார்.  (more…)

ஐம்பாதாயிரத்திற்கும் அதிகமாக மாத வருமானம் ஈட்டுவோரிடம் வரி அறவீடு: நிதி அமைச்சு

மாதாந்தம் 50000 ரூபாவிற்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோரிடம் வரி அறவீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.மாதாந்தம் 50000 முதல் 100000 ரூபா வரையில் வருமானம் ஈட்டும் நபர்களிடம் 2 வீத வரியை அறவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர தெரிவித்துள்ளார். (more…)

இந்திய பயணிகளின் வியாபார செயற்பாட்டால் யாழ்.வியாபாரிகள் பாதிப்பு

சுற்றுலா விசாவில் இலங்கை வரும் இந்திய பயணிகள் யாழப்பாணத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபடுவதால் யாழ்.வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார் (more…)

மாதாந்த கட்டணம் செலுத்தாவிடின் உடனடியாகவே மின்சாரம் துண்டிப்பு

மின்பாவனையாளர்களுக்கான மின் கட்டண நடவடிக்கைகள் இந்த வருடம் தொடக்கம் மேலும் இறுக்கமடைகிறது. சுன்னாகம் மின் பொறியியலாளர் ஞானகணேசன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: (more…)

வேலணையில் மின்சாரம் இல்லாத பிரதேசங்களில் சூரிய மின்கலம் பொருத்தப்படும்

வேலணை பிரதேசத்தில் மின்சாரம் இல்லாத இடங்களில் (சோலர்) சூரிய மின்கலம் பொருத்துவதற்காகவும் குடிநீர்ப்பிரச்சினையை தீர்ப்பதற்காக கிணறுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்றுவருவதாக வேலணை பிரதேச சபை தவிசாளர் சி.சிவராசா தெரிவித்தார்.   (more…)
Loading posts...

All posts loaded

No more posts