- Thursday
- January 16th, 2025
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 8ஆவது தேசிய மாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26ஆம் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதென இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், (more…)
மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு கோரிக்கை ஒன்றினை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் போக்குவரத்து சபை உபதலைவர் வி. விமலரட்ணவிடம் முன்வைத்துள்தாக போக்குவரத்து சபை முகாமையாளர் அஸ்ஹர் தெரிவித்தார். (more…)
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலரது வீட்டு முகவரிகள் பெறப்பட்டு இனம் தெரியாத நபர்களினால் அவர்களது வீடுகளுக்கு அநாமதேய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர். (more…)
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் பஸ்ஸின் சாரதி தப்பியோடிய சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. (more…)
வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் 2013 ஆம் ஆண்டில் சிவில் ஆவணங்களை பிறப்புச்சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் தகுதியான அனைவருக்கும் வழங்கி முடிப்போம்.உரிய சான்றிதழ்கள் இன்றி எதிர்காலத்தில் யாரும் இருத்தல் கூடாது. அதற்கு ஏற்ற முறையில் நடமாடும் சேவைகள் கிராம அலுவலர் பிரிவு வாரியாக நடத்தப்படும். (more…)
50,821 பட்டதாரிகளுக்கு நாளைய தினம் அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். (more…)
ஈழத்து எழுத்தாளர்கள், இலக்கிய கர்த்தாக்களை ஊக்குவிக்கும் முகமாக ஈழத்து எழுத்தாளர்களின் இலக்கிய கர்த்தாக்களின் நூல்களை கொள்வனவு செய்வதற்கு வேண்டிய நடவடிக்கைகளை இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. (more…)
குடாநாட்டில் மழை வெள்ளம் தேங்காதவாறு தொண்டமானாறு, அராலி, அரியாலைப் பகுதிகளில் உள்ள கடல் நீரேரி தடைக் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஊடாக மழை வெள்ளம் கடலுக்குள் செலுத்தப்படுகின்றது என்று நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (more…)
யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவர் சிவன் சுதனுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: (more…)
உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 38ஆவது நினைவு தினம் நேற்று வியாழக்கிழமை யாழ்.ஒல்லாந்தர் கோட்டைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தமிழாராய்ச்சி உயிர்கொடை உத்தமர்கள் நினைவாலய நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது. (more…)
யாழ். கோண்டாவில் கிழக்கு, மத்தி ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 6 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கோண்டாவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார். (more…)
யாழ். மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவில்லை என யாழ்.மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்க செயலாளர் மு.ரெமீடியாஸ் நேற்று தெரிவித்தார். (more…)
வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காகவும் அமுல்படுத்தப்படவுள்ளது. (more…)
யாழ். மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடைமழைக் காரணமாக 1648 குடும்பங்களைச் சேர்ந்த 5656 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் அவர்கள் நேற்றய தினம் தெரிவித்தார். (more…)
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்
யாழ். மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டீன் றொபின்சன் யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தை அவரது இல்லத்தில் நேற்றயதினம் சந்தித்தார். (more…)
யாழ். வியாபாரியொருவரை ஏமாற்றி 40 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர் இருவரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மஜிஸ்திராத்தும் மேலதிக மாவட்ட நீதவானுமான ருவன்னிகா மாரப்பன உத்தரவிட்டார். (more…)
சட்டத்தரணிகள் நாடு தழுவிய ரீதியில் போராட்டமொன்றை நடாத்தத் தீர்மானித்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது.எதிர்வரும் ஜனவரி மாதம் 10ம் மற்றும் 11ம் திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. (more…)
யாழ். ஆஸ்பத்திரி வீதி புகையிரத நிலையச் சந்தியிலுள்ள இரு கடைகள் உடைக்கப்பட்டு அக்கடைகளிலிருந்து பணமும் பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன. (more…)
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்ற நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை 54.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலைய அவதானிப்பாளர் ஜே.டி.நுவான் தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts