- Tuesday
- November 26th, 2024
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடித்த பதின்மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகையும் அதிலிருந்த பதின்மூன்று இந்திய மீனவர்களையுமே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச்...
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணியின் மூன்றாம் கட்டத்தில் ஆறாம் நாள் அகழ்வு புதன்கிழமை (10) இடம்பெற்றது. குறித்த அகழ்வின் போது பார்வையாளராக 10ஆம் திகதி புதன்கிழமையும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தின் மனித உரிமைகளுக்கான அதிகாரி லூடியானா செல்றினி அகிலன் அவர்களும் இந்த அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்திருந்தார். இந்த அகழ்வு பணியின்...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குத் தற்காலிக மின்பிறப்பாக்கி வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அங்கஜன் இராமநாதன் மேலும் தெரிவித்துள்ளதாவது” சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கான மின்சார மாற்றீடுகள் (Power Backup) இல்லாத நிலை தொடர்பில் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது....
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 29 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று (09) மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூறப்பட்டது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நேற்று மாலை பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த...
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டு, மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் செயற்பட்டு, 2024 ஆம் ஆண்டு ஜூலை 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்றுத் தரம் அல்லாத அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் விசேட சம்பள உயர்வொன்றை வழங்குவதற்கும், அவர்கள் அனைவருக்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்குப் பயன்படுத்தும் வகையில் விசேட...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதனை அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, வடக்கு மற்றும் கிழக்கு...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை புதிய வைத்திய அத்தியட்சராக கோபால மூர்த்தி ரஜீவ் இன்று செவ்வாய்க்கிழமை (09) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து நேற்று திங்கட்கிழமை (08) நண்பகல் வெளியேறினார். பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களை கருத்தில் கொள்ளாது தமது சுகபோகங்களை அனுபவிப்பதற்காக வைத்தியசாலையை விட்டு ஓடிச் சென்ற வைத்தியர்களை எவ்வாறு மக்கள் நம்புவது என போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார். திங்கட்கிழமை (08) சாவச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனாவை மாற்றக்கூடாது மற்றும் வைத்தியசாலையின் செயற்பாடுகளை...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சார்ளஸ் ஆகியோருடான கலந்துரையாடலில் இதனை வெளிப்படுத்தினார். மேலும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான...
வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் மனைவி ஒருவரையும் அவரது இரு பிள்ளைகளையும் காணவில்லை என கணவர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றில் 32 வயதான அ.அபிராமி என்னும் பெயருடைய தனது மனைவி, பிள்ளைகளான கம்சனா (வயது 11), சன்சிகன் (வயது 8) ஆகிய இருவரையும்...
அனைத்து அரச பாடசாலைகளிலும் நாளை(09) கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று நடைபெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) தொழிற் சங்க நடவடிக்கையினை முன்னெடுத்து வரும் நிலையில் நாளையும்(09) போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளன. இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரச பாடசாலைகள் அனைத்தும்...
சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன் அர்ச்சுனா தற்போது வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் விசேட பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டுள்ள நிலையிலும், சுகயீன விடுமுறையின் காரணமாகவும் அவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் 200ற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று மற்றும் நாளை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி தபால், நில அளவையாளர், கிராம சேவை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரச ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இதனால், ஏ- 9 வீதியுடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்ததோடு, குறித்த பகுதியில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நாடாளுமன்றம் கூடிய வேளை எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்லவினால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் விடுமுறைக்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு இன்று முதல் மூன்று மாதங்களுக்கு...
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவனின் தலையில் ஆசிரியர் தாக்கியதால் பாடசாலை செல்வதற்கு மாணவன் மறுப்புத் தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது, கடந்த 19 ஆம் திகதி குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தலையில்...
வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசித்து வருகின்றார். அவர் தனது காணிக்கான அற்றோனித்தத்துவ அதிகாரத்தை தனது ஒன்றுவிட்ட சகோதரிக்கு வழங்கியிருந்தார். இந்த நிலையில், காணி உரிமையாளரின் சொந்தச் சகோதரி பிறிதொரு...
யாழில் முதியவர் ஒருவரைக் கழுத்து நெரித்துப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். [caption id="attachment_99954" align="alignnone" width="300"] Arrested man in handcuffs with hands behind back[/caption] அண்மையில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய முதியவர் படுக்கையில் உயிரிழந்துள்ளதாக அவருடன் வசித்து வந்த இளைஞன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதியவரின் இறப்பில்...
யாழ். பண்ணைக் கடலில் நேற்று முன்தினம் இரவு மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் முரல் மீன் தாக்கி உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியைச் சேர்ந்த மைக்கல் டினோஜன் என்ற 29 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்று முன்தினம் இரவு மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை முரல் மீனொன்று இளைஞனின் கழுத்தைத் தாக்கியுள்ளதாக...
இந்திய அரசால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 934 மழை நீர் சேகரிப்புத் தாங்கிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் தூய்மையான குடிநீரை விநியோகிப்பதற்காக இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி குறித்த மாவட்டத்தில் 3000 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக 2016.10.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கபட்டுள்ளது. இக்கருத்திட்டம் 3 வருடகாலத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts