- Sunday
- April 20th, 2025

அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி தனியார் பேருந்தினர் பயணிகளுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்துவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். நேற்று (27) யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகளவான பயணிகளை ஏற்றியவாறு பயணித்த பேருந்தின் காப்பாளர், பயணிகளின் இருக்கைக்கு மேலாக கடந்து சென்று அசௌகரியங்களை ஏற்படுத்தியமை பயணிகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சிக்கும் முகமாலை பகுதிக்கும் இடையில்...

கொழும்பு, யாழ்ப்பாணம், காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளன. கொழும்பு, யாழ்ப்பாணம், காலி, திருகோணமலை, மட்டக்களப்பு,...

பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. காயமடைந்த இருவரும் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது. இதன்போது இந்திய...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலுக்கு பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் வருமாறு, அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்தின் பின்னர்...

எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் கடந்த 24 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டமானது நான்கு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து நடைபெற்றிருந்தது. தற்பொழுது ஒரு சில நிர்வாக மற்றும் அரசியல் நோக்கங்களிற்காக அது முழுமையாக திரிபுபடுத்தப்பட்டு போராட்டத்தின் நோக்கம் முழுமையாக திசை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. போராட்டத்தின் நோக்கத்தினையும் சரியான புரிதலையும் வழங்கும் நோக்கத்துடன்...

இளம் சமுதாயத்தை நாசமாக்க கூடிய போதை பாவணையை தடுத்து நிறுத்தி ஒரு ஆரோக்கியான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் இந்த கால பொறுப்பை கைகளில் ஏந்த வேண்டும் என யாழ் . பல்கலைக்கழக பேராசியர் சி. ரகுராம் அறைகூவல் விடுத்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலான போதைப்பாவனையை தடுத்து நிறுத்துக்கும் முயற்சியில்...

நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பில் வடமாகாண மாங்குளத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் அண்மையில் வைரலானதுடன், பலரின் கண்டனத்தையும் பெற்றது. இது தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே மேற்கண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தண்ணிமுறிப்பு பகுதியில் பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அபகரித்து வைத்திருப்பதால் அதனை மீட்டுத்தரக்கோரி இன்று திங்கட்கிழமை (27) காலை பாடசாலை சமூகத்தினர், ஊர் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். யுத்த காலத்துக்கு முன்னர் நீண்டகாலமாக பாடசாலை இயங்கிவந்த காணியை யுத்தம் நிறைவடைந்து...

கசூரினா கடலில் நீராடிய அறுவர் விஷப்பாசி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கசூரினா சுற்றுலா மையமானது காரைநகர் பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படுவதால் இது குறித்து காரைநகர் பிரதேச சபையின் செயலாளரை தொடர்புகொண்டு வினவியவேளை, இன்றையதினம் (26) விஷப்பாசி தாக்கி ஆறுபேர் காரைநகர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக...

சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான பென்சில்களில் சிறுவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் காணப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக பாடசாலைச் சிறுவர்கள் பயன்படுத்தும் பென்சில்கள் பல்வேறு வண்ணங்களில் கவர்ச்சிகரமான தோற்றத்தில் விற்கப்படுவதால் குழந்தைகள் அவற்றை வாங்குவதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர் எனவும், அவ்வாறான பென்சில்களில் அதிக அளவு இரசாயனங்கள் மற்றும் பாதரசம், ஆர்சனிக் மற்றும்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் எந்த அடிப்படையில் அந்த பதவியில் இருந்து விலகினாரோ அந்த விடயத்துக்காக உயர்ந்த கௌரவத்தோடு என்ன விடயத்திற்காக பாடுபட்டாரோ அந்த விடயத்திற்கான வெற்றியோடு மீளவும் கலைப்பீட பீடாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மீளவும் கலைப்பீட...

இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மண்டபம் தற்போது மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குறித்த மண்டபம், யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பெயர் பலகை இன்றையதினம் பொருத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற அழிவு யுத்தம் நிறைவுக்கு வந்தபின்னர் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் புதுடில்லி சென்றிருந்த...

நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை (24) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது. இன்று வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமான இந்த கண்காட்சி 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் காலை 10:00 மணி முதல், இரவு 07:00...

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி, ஊரியான், பெரியகுளம் கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் வயல் நிலங்களுக்கும் அழிவினை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளப் பாதிப்பு காரணமாக குளங்களில் நீர்மட்டம் அதிகரித்தமையால் முதலைகளும் மக்கள் குடியிருப்புபகுதிகளுக்குள் புகுந்து பெரும் அச்சத்தை...

வைரஸ் பரவல் அதிகரித்துள்ள இக்காலப்பகுதியில் ஆஸ்துமா நோய் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளமையால் ஆஸ்துமா நோயாளர்கள் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு ஆளான சிறுவர்கள் குறித்தும் பெற்றோர் அவதானத்துடன் செயல்படுவதுடன் நோய் தீவிரமடையும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு களுபோவில போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க வலியுறுத்தியுள்ளார். சுவாசநோய் தொடர்பில்...

நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 64 நாட்கள் கடந்துள்ள நிலையில், நாடாளுமன்றில் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக முறைப்பாடு வழங்கி 36ஆவது நாள் கடந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (23) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், இன்றிலிருந்து மனதளவில் அரசாங்கத்திற்கு வழங்கிய அனைத்து ஆதரவை மீளப் பெற்றுக்கொள்வதாகவும்,...

மருதானை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார். மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்ப் பெண் உயிரிழந்தமை தொடர்பாக ஐங்கரநேசன் விடுத்துள்ள செய்தி அறிக்கையிலேயே அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :...

மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நேற்றையதினம் (22.01.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே குறித்த அமைப்பின் சார்பில் கலந்துகொண்ட கருணாகரன் நாவலன், முன்னாள் வடக்கு மாகண...

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 52 வயதான ஆசிரியர் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள்...

2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (23) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு கூறினார். புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடியினால் பெறுபேறுகளை மதிப்பிடுவதை...

All posts loaded
No more posts