க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு 2017 ஆம் ஆண்டில் தோற்றவுள்ள மாணவர்களிடம் பரீட்சைகள் திணைக்களம் விண்ணப்பம் கோரியுள்ளது.
விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி கால எல்லை பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியாகும்.
பாடசாலை மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள் விண்ணப்பப்படிவங்கள் தபாலிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
தனியார் பரீட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவங்கள் தேசிய பத்திரிகைகளில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.