கடந்த வார இறுதியில் இருந்து சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ADSL புரோட்பாண்ட் இணைய சேவைகளில் நாடுமுழுவதிலும் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கி இணைய சேவைகள் நேற்றிரவில் இருந்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.இது தொடர்பாக யாழ் ரெலிகொம் அலுவலகத்தில் இருந்து கிடைத்த தகவல்களின்படி பொறியலாளர்களினால் மேற்படிப்பிரச்சனை சீர்செய்யப்பட்டுவிட்டதாக நேற்றிரவு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இன்று காலை ADSL இணையப்பாவனையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
- Friday
- April 4th, 2025