9A சித்திபெற்ற வட இந்து மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு அன்பளிப்பு

donation-lades-colleageக.பொ.த (சா.த) பரீட்சையில் 9A சித்தி பெற்று உயர்தரத்தை மேற்கொள்ளுவதற்கு வட இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவிகளுக்கு பருத்தித்துறை ஸ்ரீராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமத்தால் உதவுதொகை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி தலா ஒரு மாணவிக்கு ரூபா 10ஆயிரம் ரூபாவும் புத்தகப்பொதிகளையும் அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு அண்மையில் கல்லூரியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு வட இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி தேவராணி நவரத்தினம் அவர்கள் தலைமை வகித்தார். இதில் பருத்தித்துறை ஸ்ரீராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரம சுவாமி சித்துருபானந்தா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளான கா.கீர்த்தனா, மு.வெண்ணிலா, இ.சுரேகா, சி.கோகிலா, ச.டிலோஜி ஆகியோருக்கு அன்பளிப்புகளை வழங்கி கௌரவித்தார்.

Related Posts