உலக கிண்ணத்தை வெற்றிக்கொண்டு 20 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு ’96 கொண்டாடுவோம்’ எனும் தலைப்பின் கீழ் பல்வேறுப்பட்ட நிகழ்வுகளை இலங்கை துறைமுக அதிகாரசபையின் விளையாட்டுப்பிரிவு சேவ் த ஸ்போர்ட் இயக்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
இதனை முன்னிட்டு ’96 கொண்டாடுவோம் – கிரிக்கெட் பயிற்சி முகாம்’ நாளை மறுநாள் (18) தெஹிவல கவுடானந்த சாஸ்திரானந்த மகா வித்தியாலயத்தில் நடைப்பெறவுள்ளது.
தெஹிவல கவுடானந்த சாஸ்திரானந்த மகா வித்தியாலயத்திலயம் என்பது மிகவும் வறிய பாடசாலையென்ற போதிலும் கிரிக்கெட் போட்டிகளில் பல வெற்றிகளை ஈட்டிக்கொண்ட ஒரு பாடசாலையாகும். இப்பாடசாலையின் கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புடன் நடைப்பெறவுள்ள 96 ரை கொண்டாடுவோம் என்கின்ற கிரிக்கெட் பயிற்சியில் யாழ் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ள 20 விளையாட்டு வீரர்கள் மற்றும் பஸ்யால நாம்புலுவ பாபுசலாம் முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் 19ம் வயதிற்கு குறைந்த கிரிக்கெட் அணியினரும் பங்குக்கொள்ளவுள்ளனர்.
அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான இப்பயிற்சி முகாமை 96ம் ஆண்டு வெற்றி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்களே நடாத்திச் செல்லவுள்ளனர்.
இந்நிகழ்வின் ஒரு கட்டமாக யாழ் மாவட்ட கிரிக்கெட் அணி உறுப்பினர்கள் கொழும்பை நோக்கி நட்புரீதியிலான சுற்றுப் பயணமொன்றையும் மேற்கொள்ளவுள்ளனர். ’96 கொண்டாடுவோம்- புதிய அனுபவம் ’96 ரை கொண்டாடுவோம் – வண்ணமயமான எதிர்காலத்துடன் கூடிய மக்கள் நலதிட்ட செயற்பாடு ஆகியன இந்நிகழ்வுகளினுள் உள்ளடங்கும்.
AR