90 நாடுகளின் தலைவர்களுக்கு விசேட அழைப்பு விடுத்துள்ள சுவிட்சர்லாந்து!!

உக்ரைன் உலக அமைதி உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக, 90 உலக நாடுகளின் தலைவர்கள் சுவிட்சர்லாந்து செல்ல இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் உலக அமைதி உச்சி மாநாடு இம்மாதம்,15 மற்றும் 16ஆம் திகதிகளில், சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளது.

குறித்த மாநாட்டில் பங்கேற்க, 90 உலக நாடுகளின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்து இருப்பதாக சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதியான வயோலா அம்ஹெர்ட்(Viola Amherd) தெரிவித்துள்ளார்.

28 மாதங்களுக்கு முன் ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதால் ஆரம்பித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.

உக்ரைனின் கோரிக்கையை ஏற்று சுவிட்சர்லாந்து இந்த மாநாட்டை நடத்துவதால், ரஷ்யா அதில் பங்கேற்கப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தைப்போலவே சுவிட்சர்லாந்தும் ரஷ்யா மீது தடைகள் விதித்ததால், அந்நாடு நடுநிலைமை நாடு அல்ல என ரஷ்யா கூற, ரஷ்யாவுக்கு அழைப்பும் இல்லை என சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.

இந்நஜலையில், பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா முதலான நாடுகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளன.

Related Posts