90 கிலோ குண்டான சிம்பு

பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வரும் மூன்று கெட்டப்புகளில் நடிக்கும் சிம்பு, 90 கிலோ எடை கொண்ட குண்டான மனிதர் கெட்டப்பிலும் நடிக்கவிருக்கிறாராம்.

simbu-fat

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பெயரிப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு மேக்கப் போடுவதற்காக ஹாலிவுட் கலைஞர் சீன் புட் நியமிக்கப்பட்டுள்ளார். அதனால், இப்படத்தில் அவருடைய கெட்டப்புக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

இந்நிலையில், சிம்பு இந்த படத்தில் நடிக்கும் ஒரு கெட்டப் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் சிம்பு 90 கிலோ எடை கொண்ட மனிதராக நடிக்கவிருக்கிறாராம். அதற்காக தனது உடல் எடையை விரைவில் அதிகரிக்கவுள்ளாராம். அதற்கான முயற்சிகளிலும் சிம்பு இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கதாபாத்திரத்திற்குண்டான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதும், அதன்பிறகு மீண்டும் தனது உடல் எடையை குறைக்கவும் முடிவு செய்துள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு ‘வாலு’ இயக்குனர் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு நடிப்பில் ஏற்கெனவே ‘இது நம்ம ஆளு’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இவ்விரு படங்களும் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

Related Posts