90 ஆயிரத்தை பலூனில் பறக்கவிட்ட இலங்கை வங்கி

இலங்கை வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ் நகரில் நடை பவனி ஊர்வலம் இடம்பெற்றது.

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து இலங்கை வங்கி ஊழியர்களும் இணைந்து இன்று காலை யாழ்நகர வீதி வழியாக தமிழர் பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்வுகளுடன் ஊர்வலமாக வந்தனர்.

இதன் போது 450 பலூன்கள் இலங்கை வங்கியின் யாழ். மாவட்ட பிரதான காரியாலயத்தில் வைத்து பறக்கவிடப்பட்டிருந்தது. இதில் 1000 ரூபா பரிசுக்கூப்பன் இணைக்கப்பட்ட 90 பலூன்கள் பறக்கவிடப்பட்டிருந்தன.

குறித்த பரிசுக் கூப்பன்கள் அடங்கிய பலூன்களை எடுப்பவர்கள் ஒரு மாத காலத்திற்குள் அருகில் உள்ள இலங்கை வங்கி காரியாலயத்தில் கொடுத்து பணத்தினை பெற்றுக்கொள்ளுமாறு வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

bank-of-cylone bank-of-cylone-2 bank-of-cylone-3 bank-of-cylone-4

Related Posts