மீனவர்களுக்கான இறங்குதுறையொன்று நிர்மாணிக்கும் வரை தனது தாடியை வெட்ட மாட்டேன் என கடந்த 9 வருட போராட்டத்தில் ஈடுபட்ட மீனவரின் தாடி, மீன்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் இன்று (02) வெட்டப்பட்டது.
தெல்வத்த, பெராலிய பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர், தனது போராட்டத்தை கடந்த 2005ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வந்தார்.
இந்நிலையில், குறித்த பிரதேசத்தில் இறங்குதுறையொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று மீன்வளத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, குறித்த மீனவரை சந்தித்த அமைச்சர், இறங்குதுறை அமைப்பதான தனது உறுதியை நிறைவேற்றியதாக தெரிவித்ததுடன் அதனால், தாடியை வெட்டுமாறு கோரியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த மீனவரின் தாடியை, தானே வெட்டிவிட்ட அமைச்சர், இந்த இறங்குதுறை நிர்மாணத்துக்காக 3 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.