9 லட்சம் ரூபா செலவில் யாழ். மணிக்கூட்டு கோபுரத்திற்கு புதிய மணிக்கூடுகள்

யாழ். மகாத்மா வீதியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு புதிய மணிக்கூடுகள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். இந்த கோபுரத்திற்கான மணிக்கூடுகள் பொருத்தும் பணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டதாகவும் அதன் ஒப்பந்த காலம் நிறைவடைந்துள்ளமையால் இந்த மணிக்கூட்டுக்கு கோபுரத்திற்கு மணிக்கூடுகள் பொறுத்தும் நடவடிக்கையை யாழ். மாநகரசபை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக யாழ்.மாநகர அபிவிருத்தி நிதியில் இருந்து 9 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெவித்தார்.

Related Posts