யாழ்ப்பாணம், நாவலடி மணியந்தோட்டத்தில் 09 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதான தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கைதான தாய்க்கு மனநிலை பரிசோதனை மேற்கொண்டு அந்த அறிக்கை சமர்ப்பிக்கவும் குழந்தையின் உடல்நிலை தொடர்பான அறிக்கையையும் சமர்பிக்குமாறு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறித்த தாய் தனது 09 மாத ஆண் குழந்தையை அடித்து துன்புறுத்திய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டமையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், திருகோமலையைச் சேர்ந்தவர் என்றும் அவரது கணவர் அரபு நாடு ஒன்றில் தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்ற நிலையில், குறித்த பெண் யாழ். மணியந் தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.