850 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நேர்முகப் பரீட்சை!

Job_Logoதேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வண்ணம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துலகுணவர்­தன தெரிவித்துள்ளார்.

சிங்­களம், தமிழ் மற்றும் ஆங்­கில மொழி மூலங்­களில் நிலவும் ஆசி­ரியர் பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்யும் நோக்கில் புதிய பட்டதாரி ஆசிரியர்கள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன் அதற்காக வர்த்­த­மானி அறிவித்தலின் ஊடாக பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­க­ளிடம் விண்ணப்பம் கோரப்பட்டு அவ்­விண்­ணப்­பங்­களை பரி­சீ­லனை செய்த பின்பு சிறந்த தகைமை கொண்ட பட்டதாரிகளுக்கு இந்நேர்­முகப்பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ள­தாக அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அத்துடன் மூன்றாம் தவணைக்காக பாடசாலைக்கள் ஆரம்பிக்கப்படும்­போது இப்புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதுடன் பற்றாக்குறையாக காணப்படும் பாடங்களுக்கான 850 ஆசிரியர்கள் சேவையில் அமர்த்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts