83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி!

இலங்கை அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது பாகிஸ்தான். ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 292 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணியின் சார்பில் பாபர் அசாம் 103 ஓட்டங்களையும் சோயிப் மாலிக் 81 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் சுரங்க லக்மால் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

தொடர்ந்து 293 என்ற ஓட்ட இலக்குடன் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய இலங்கை 50 ஓவர் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள 83 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் லகிரு திரிமன்னே 53 ஓட்டங்களையும் தனஞ்சய 50 ஓட்டங்களையும் ஜெப்ரி வன்டர்சே 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ரம்மன் ரைஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக சோயிப் மாலிக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Related Posts