நெடுந்தீவு கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 இலங்கை மீனவர்களை, காங்கேசன்துறை கடற்படையினர் திங்கட்கிழமை (31) மாலை கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.
கைதான மீனவர்களிடமிருந்து 80 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டடுள்ளதாகவும் காரைநகர் மற்றும் வேலணை பகுதியைச் சேர்ந்வர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
நெடுந்தீவுக்கு வடக்கில் 8 கடல் மைல் தூரத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில், நெடுந்தீவு கரையை நோக்கி வந்துக்கொண்டிருந்த டிங்கி படகை, கடற்படையினர் சோதனையிட்ட போதே குறித்த தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா, சுமார் 1.2 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என்றும் தெரிவித்த பேச்சாளர், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் கையளிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.