8 தோற்றங்களில் மிரட்டும் விஜய்சேதுபதி!

வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்கள் தேர்விற்கு பேர் போனவர் நடிகர் விஜய் சேதுபதி . இவரின் அடுத்த படமான ” ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ” இவருடைய பெயர் சொல்லும் அப்படி பட்ட ஒரு வித்தியாசமான படமாகும்.

இது ஓர் அட்வெஞ்சர் காமெடி படமாகும். இதில் இவர் , இதுவரை யாருமே செய்திராத, ஒரு சுவாரஸ்யமான பழங்குடி இன தலைவராக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்க்காக 8 வெவ்வேறு தோற்றங்களில் கலக்கியிருக்கிறார். இவரது நடிப்பு திறனையும் அர்ப்பணிப்பையும் கண்டு வியந்ததாக கூறுகிறார் இப்படத்தில் இயக்குனர் ஆறுமுக குமார்.

” 8 வெவ்வேறு தோற்றங்களில் விஜய் சேதுபதி இக்கதையில் விளையாடியுள்ளார். இப்படத்தின் இயக்குனராக மட்டும் இன்றி அவரது தீவிர ரசிகராகவும் இப்படத்தின் அவரது நடிப்பை மிகவும் ரசித்தேன். இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிக மிக மிக சுவாரசியமானது மட்டுமின்றி மிகவும் சவாலானது கூட. இச்சவாலை அவர் மிக சுலபமாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாண்டதை கண்டு ஆச்சிரியப்பட்டு வியந்தேன்.

”ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” மிக சிறப்பாக வந்துள்ளது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்தாகிவிட்டது. விஜய் சேதுபதியின் 8 வெவ்வேறு தோற்றங்களும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவரும். இப்படத்தின் இன்னொரு கதாநாயகனான கவுதம் கார்த்திக் சமீபத்தில் சுவைத்த தரமான வெற்றி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவர் மேலும் பல உயரங்களை தொடுவர். தமிழ் சினிமா ரசிகர்களில் ரசனையை மனதில் வைத்து கொண்டே ”ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ” படமாக்கி உள்ளோம்’ என தன்னம்பிக்கையுடன் கூறி விடைபெற்றார் இயக்குனர் திரு. ஆறுமுக குமார் .

Related Posts