8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய அவர்கள் தெரிவு!

8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்

கரு ஜயசூரியவின் பெயரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்ததுடன், அவரது பெயரை நிமல் சிறிபால டி சில்வா வழிமொழிந்துள்ளார்.

இதற்கமைய பிரதமர் மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் புதிய சபாநாயகரை பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைய அக்ராசனம் வரை அழைத்துச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் தமது நியமனப் பத்திரத்தில் கையொப்பமிட்டார்.

தேசபந்து கரு ஜயசூரிய இலங்கையின் 20 ஆவது சபாநாயகராவார்.

Related Posts