ஜெர்மனியில் 7,500க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்ற உலகின் மிக பிரம்மாண்ட இசைக் கச்சேரி நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.
ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்த் நாடுகளை சேர்ந்த இசைக் கலைஞர்கள் பல்வேறு பாப் பாடல்களையும், மெலடி இசைகளையும் மற்றும் பாரம்பரிய இசைகளையும் வாசித்தனர்.
இதில், பீத்தோவனின் ”ஒடே டூ ஜாய்” இசையும் அடக்கம்.
மூன்றாண்டுகளுக்குமுன், ஆஸ்திரேலியா நகரமான பிரிஸ்பேனில் நடந்த இசைக் கச்சேரியில் பங்கேற்ற கலைஞர்களின் எண்ணிக்கையை காட்டிலும், ஃபிராங்ஃப்ர்ட் மைதானத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் 300 பேர் அதிகமாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.