கிளிநொச்சியில் 70 வருடங்களின் பின் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இங்கு 373.2மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மன்னார் பகுதியில் பெய்த கடும் மழையுடன் கூடிய காற்றினால் பேசாலைப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்து சுமார் 40 வரையான மீன்பிடிப்படகுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.