70 புதிய கட்சிகள் பதிவிற்காக விண்ணப்பம்!

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியுடன் நிறைவு பெறவுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

70 புதிய கட்சிகள் பதிவிற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சில கட்சிகளின் பதிவை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த கட்சிகள் தமது கணக்கறிக்கையை சமர்ப்பிக்காததன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts