7 மாத குழந்தையின் தாய் 10 பேரால் துஸ்பிரயோகம் !

ஏழு மாத குழந்தையின் தாயை மிகவும் கொடுமையாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய சந்தேக நபர்கள் 10 பேர் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கம்பளை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவானால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் கம்பளை சிங்கபிட்டி பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவரின் கணவர் இராணுவத்தில் வேலை செய்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், கணவன் வீட்டில் இல்லாத போதே மேற்படி சம்வம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாயின் குழந்தை பசிக்காக அழுது கொண்டிருந்த வேளையிலேயே இரக்கமற்ற சந்தேக நபர்கள் தாயை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 10 பேரும் சிங்கபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related Posts