போக்குவரத்துச் சட்ட மீறல்களுக்காக 25 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடும் சட்ட மூலத்தின், மீளமைக்கப்பட்ட அறிக்கை இன்னும் இரு வாரங்களில் தயாரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
7 போக்குவரத்துக் குற்றச் செயல்களுக்காக இந்த தண்டப்பணம் அறவிடப் போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் தண்டப் பணம் சீர்திருத்தம் செய்ய நியமிக்கப்பட்ட குழுவுக்கும் பஸ் சங்கத்துக்கும் இடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது பஸ் போக்குவரத்து தொழிலின் போது எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார்.