கீரிமலை கடற்கரைப்பகுதியில் கலாசார சீர்கேடுகள்!! தடுக்குமாறு ஆர்வலர்கள் கோரிக்கை

கீரிமலை கடற்கரைப் பகுதியில் பல கலாச்சாரச் சீரழிவுகள் இடம்பெறுகின்றன, பட்டப்பகலில் பாலியல் செயற்பாடுகள் தாராளமாக இடம்பெறுகின்றன, அவர்களைக் கட்டுப்படுத்துவது சிரமமாகவுள்ளது, மேலும் மாணவ, மாணவிகளும் இதில் உள்ளடங்குவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கீரிமலை கடற்பகுதி இறந்தவர்களுக்கு பிதிர்க்கடன் செய்யும் ஒரு புனித பிரதேசமாகும். கடற்கரையை அண்மித்து வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான நகுலேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது. இங்கு நாளாந்தம் உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் பெருமளவான மக்கள் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு பொதுமக்கள் கூடும் பிரதேசங்களில் இளம் வயதைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அநாகரிகமாக முகம் சுழிக்கும் வகையில் பல செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அங்கு வரும் பெண்கள், சிறுவர்கள் இதனால் பெரும் அசெளகரியங்களைச் சந்திக்கின்றனர் என்று கூறப்பட்டது.

அந்தப் பிரதேசத்துக்கு அண்மையில் வசிக்கும் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த பிரதேசத்துக்கு வரும் ஜோடிகள் கடற்கரையோரங்களில் செய்யத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் இளம் வயதினரே அங்கு வருகின்றனர். அவர்கள் இங்கு வரும்போது புத்தகங்களுடன் வருகின்றனர். இவர்கள் காலை 8 மணியளவில் எல்லாம் இங்கு வந்து விடுவார்கள். முதலில் கடற்கரையில் அமைந்துள்ள மண்டபத்தில் மிக நெருக்கமாக உட்கார்ந்து சில்மிசத்தில் ஈடுபடுவார்கள். பொது மக்கள் வந்தாலும் அவர்கள் அதை பொருட்படுத்துவது இல்லை.

சிலவேளைகளில் இவற்றை பொறுக்க முடியாத சில பொதுமக்கள் அவர்களை அகற்ற முற்படும்போது பெண்களுடன் வரும் இளை ஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன் அவர்களை தாக்கவும் முற்படுகின்றனர். சில இளம் ஜோடிகள் கடற்கரைக்கு அண்மையில் உள்ள பாழடைந்த கட்டடங்களுக்குள் சென்று பாலியல் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர்.

காலையில் வரும் ஜோடிகள் மாலை நேரம் வரை அவர்களின் பொழுதை இங்கேயே செலவழிக்கின்றனர். இவர்களில் சிலர் பொழுது சாய்ந்து இரவு 8 மணிக்கு கூடச் செல்வார்கள். கல்வி கற்பவர்கள் அதிகம் வருகிறார்கள்.

எமது மண்ணுக்கு இருந்த கலாச்சாரம், பண்பு, கெளரவம் எல்லாம் போர் முடி வடைந்த பின்னர் அழிவுப் பாதையை நோக்கிச் செல்கின்றது. இனிவரும் காலங்களில் எமது முன்னோர்களால் கட்டிக் காப்பாற்றி வந்த பாரம்பரியம் எல்லாம் அழிந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

சமூகச் சீரழிவுகள் தொடர்வதை தடுத்து நிறுத்த வேண்டும். எமது கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இது தொடர்பில் சம்ப ந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பிரதேச மக்களும் அங்கு வருகை தருபவர்களும் கோரி க்கை விடுத்துள்ளனர்.

பெற்றோர்களும் தமது பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொள்வதுடன் அவர்கள் எங்கு செல்கிறார்கள் அவர்களின் செயற்பா டுகள் பற்றி அக்கறை எடுக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர்.

Related Posts