65 ஆயிரம் வீட்டுத்திட்டத்துக்கு பலவழிகளிலும் முட்டுக்கட்டை! தடையைத் தாண்டிப் பயணிப்போம்!!

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கான 65 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு பல முட்டுக்கட்டைகள் காணப்படுகின்றபோதிலும் அதை திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுப்போம் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் நிலைவரம் தொடர்பில் டக்ளஸ் தேவாந்தன் எம்.பி. எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வாழ்வாதாரத் திட்டங்கள், அவற்றை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் தொடர்பாக எழுப்பட்ட கேள்விகளுக்கு இன்னும் ஒரு வாரத்தில் பதிலளிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Posts