65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்கீழ் ஒவ்வொன்றும் 1.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான 28 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்த வீடுகளை இந்திய மற்றும் இலங்கை கட்டுமான நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான யோசனையை மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்வைத்திருந்தார்.

Related Posts