62 வயது பாக். ரசிகருக்கு உதவிய டோணி!!

62 வயதான பாகிஸ்தானைச் சேர்ந்த தனது தீவிர ரசிகரான முகம்மது பஷீருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து வங்கதேசத்திற்கு வரவழைத்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆசியாக் கோப்பைப் போட்டியை பார்க்க உதவியுள்ளார் கேப்டன் டோணி.

dhoni--mohammed-bashir

மிர்பூரில் நடந்த இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி இரு நாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியைக் காண வந்திருந்த பாகிஸ்தான் ரசிகர்களில் முக்கியமானவர் பஷீர். 62 வயதாகும் இவர் கேப்டன் டோணியின் தீவிர ரசிகர் ஆவார்.

இவர் வங்கதேசத்திற்கு போட்டியைக் காண்பதற்கு வருவதற்கு வசதியாக டிக்கெட் எடுத்துக் கொடுத்து உதவினார் டோணி.

இது பஷீரை நெகிழ வைத்து விட்டது. இதுகுறித்து போட்டி நடந்த மிர்பூரில் பஷீர் கூறுகையில், டோணிதான் எனக்கு பாஸ் எடுத்துக் கொடுத்து பார்க்க உதவினார். நான் இதுதொடர்பாக அப்ரிதியிடம் (பாக். கேப்டன்) கேட்டதில்லை. கேட்கவும் மாட்டேன். அவரிடம் பேசக் கூட மாட்டேன். அவருக்கு பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் நான் கிடையாது.

பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை. இந்திய அணியைப் பாருங்கள். எவ்வளவு ஒருங்கிணைந்து விளையாடுகிறார்கள். காரணம் கேப்டன் டோணி என்று புகழாரம் சூட்டினார் பஷீர்.

இந்தப் போட்டியில் பாகிஸ்தானும் தோற்கக் கூடாது, இந்தியாவும் தோற்கக் கூடாது என்பதே தனது விருப்பதாக இருந்ததாகவம் கூறினார் பஷீர். வழக்கமாக பாகிஸ்தான் உடையில் போட்டிகளைக் காண வரும் பஷீர், இந்த முறை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு தேசியக் கொடிகள் அடங்கிய உடையில் வந்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts