61வது படத்தில் மாறுபட்ட கெட்டப்பில் விஜய்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் தெறி. இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்த விஜய், அதற்காக தனது உடல் எடை மற்றும் ஹேர்ஸ்டைலையும் மாற்றி மிடுக்காக தோன்றினார்.

அந்த தோற்றம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, விஜய்க்கும் அதிகம் பிடித்து விட்டது. அதையடுத்து மீண்டும் அட்லி இயக்கத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்த விஜய், தற்போது அந்த படத்தில் நடிப்பதற்கும் தயாராகிவிட்டார்.

மேலும், சமீபத்தில் வெளியான பைரவாவில் விஜய்யின் ஹேர்ஸ்டைலில் விக் இடம்பெற்றது. ஆனால் புதிய படத்தில் அவர் விக் வைத்து நடிக்கப்போவதில்லையாம்.

இதுவரையில்லாத ஒரு ஸ்டைலிஷான விஜய்யை வெளிப்படுத்துகிறார் அட்லி. அதன்காரணமாக, தான் சேகரித்த சில வித்தியாசமான ஹேர் ஸ்டைல்களை விஜய்யின் கவனத்துக்கு கொண்டு சென்றாராம் அவர். அதில் விஜய் ஓகே செய்த கெட்டப்பில் தற்போது அவரை டோட்டலாக மாற்றியிருக்கிறார் அட்லி.

அந்தவகையில், வழக்கத்தைவிட அதிகமான மீசையுடன் தாடி வைத்த கெட்டப்பில் தனது 61வது படத்தில் விஜய் நடிப்பது தெரியவந்துள்ளது.

Related Posts