6 விக்கெட்டுகளால் இலங்கை அபார வெற்றி!

இலங்கை அணி மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பாக முஷ்பிஹர் ரஹீம் 66 ஒட்டங்களையும், சௌம்ய ஷர்ஹர் 51 ஓட்டங்களையும் மற்றும் முஹமடுல்லா 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஜீவன் மென்டிஸ் 2 விக்கெட்டுகளையும், தனுஷ்ன குணதிலக, ஜசுரு உதான மற்றும் திஷார பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

194 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து தனது இலக்கினை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் ஹூஷல் மென்டிஸ் 53 ஓட்டங்களையும், துஷன் சனக 42 ஓட்டங்களையும் திஷார பெரேர 39 ஓட்டங்களையும் மற்றும் தனுஷ்க குணதிலக 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் நஷ்முல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும், ருபெல் ஹொஷைன் மற்றும் அஃபிப் ஹொஷைன் ஆகியோர் தலா ஒரு வி்ககெட்டையும் பெற்றனர்.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக குஷல் மென்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

Related Posts