தெரணியகல, மாகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டுள்ள ஏழுவயதான பெண் பிள்ளையும், 45 வயதான மற்றுமொரு நபரும் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு (06) இடம்பெற்றுள்ளது. அவர்களின் வீட்டுக்கு நேற்றிரவு வருகைதந்த இனந்தெரியாத நபரே இக்கொலைகளை புரிந்திருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது.
இதேவேளை, தாக்குதல்களுக்கு உள்ளான பெண்பிள்ளையின் தாய், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகபர், இனங்காணப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார், அவர், பிரதேசத்திலிருந்து தலைமறைவாகி உள்ளார். அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.