6 வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதம் ரூ.25,000 வரை அதிகரிப்பு

வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, போதையில் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், பாதுகாப்பற்ற வகையில் ரயில் பாதைகளில் பயணித்தல், காப்புறுதி ஆவணங்கள் இல்லாமை மற்றும் அதிக வேகத்துடன் வாகனம் செலுத்துதல் போன்ற ஆறு வகையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related Posts