6 லீற்றர் பெற்றோலுக்காக பல்கலைக்கழக மாணவி செய்த காரியம்!

யாழ் மீசாலைப் பகுதியில் வசிக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஒரு மூடை நெல் கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கி தனது மோட்டார் சைக்கிளுக்கு விட்டு உல்லாச சவாரி செய்துள்ளார்.

தனது நண்பியின் பிறந்த தினத்திற்காக மீசாலையில் இருந்து வட்டுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று பிறந்த தினத்தை சிறப்பித்த குறித்த மாணவியை மாணவியின் நண்பர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் எவ்வாறு கிடைத்தது என கேட்டுள்ளார்கள்.

அப்போதே குறித்த மாணவி மிகவும் சர்வ சாதாரணமாக நெல் கொடுத்து பெற்றோல் வாங்கிய கதையைக் கூறியுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் ஒருவரிடமிருந்தே குறித்த பெற்றோலை தான் பெற்றதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். அத்துடன் தனது நண்பிக்கும் பேர்த்டே பரிசாக 2 லீற்றர் பெற்றோலும் கொடுத்து அசத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பண்டமாற்று முறை என்பது இதுதானா என குறித்த மாணவியின் நண்பர்கள் தங்களது பேஸ்புக் பதிவுகளில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Posts