6 மாதங்களுக்குள் சுகததாச உள்ளரங்கு போன்று வெளிச்சமூட்டிய விளையாட்டரங்கொன்றை அமைத்து தருவதாக தொலைத்தொடர்புகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வாக்குறுதியளித்தார்.
இங்குள்ள வீர வீராங்கனைகள் சாதனையாளர்களாக மாறுவதற்கு இந்த விளையாட்டரங்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வட. மாகாண விளையாட்டுக்கள் கட்டிட தொகுதி மக்களின் பாவனைக்கநேற்று (ஞாயிற்றுக்கிழமை) கையளிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் குறிப்பிடுகையில், “6 மாதங்களிற்குள் சுகததாச உள்ளரங்கு போன்று வெளிச்சமூட்டிய விளையாட்டரங்கொன்றை அமைத்ததுத் தருவோம்.
இங்குள்ள வீர வீராங்கனைகள் சாதனையாளர்களாக மாறுவதற்கு இந்த விளையாட்டரங்கு உதவியாக இருக்கும். இந்த மைதானத்திற்காக அடிக்கல் நாட்டியவர்கள் இன்று திறப்பு விழாவிற்காக படங்கள் எதையும் பொருத்தவில்லை.
இந்த மைதானத்திற்காக 2011 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் நீண்ட காலத்திற்கு பின்னரே இதை திறந்து வைக்க முடிகின்றது” என அவர் தெரிவித்தார்.