அரச சேவையில் 5500 பட்டதாரிகளுக்கு புதிதாக நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச துறையில் தொழில்வாய்ப்பு கிடைக்காதவர்கள் முன்வைத்த மேன்முறையீட்டுக்கு அமைய, இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே, கடந்த காலத்தில் விண்ணப்பித்து வாய்ப்பு கிடைக்காதவர்கள் இம்முறை உள்ளடக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களை விரைவில் வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தில், அரச துறையில் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுமென பிரதமர் ரணில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.