சமூக சேவைகள் அமைச்சால், நாட்டிலுள்ள தனியொருவரை குடும்பத்தலைவராக கொண்ட 538 குடும்பங்களுக்கு 68.7 மில்லியன் ரூபாய் சுயதொழில் நன்கொடை உதவிகள் இவ்வருடம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார், வியாழக்கிழமை (27) தெரிவித்தார்.
இந்த சுயதொழில் நன்கொடை உதவிகள் கணவனை இழந்த பெண்களின் குடும்பங்கள், மனைவியை இந்த ஆண்களின் குடும்பங்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் குடும்பங்கள், கணவன் காணாமற்போன நிலையிலுள்ள பெண்களின் குடும்பங்களுக்கே இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சுயதொழில் நன்கொடை உதவியில், சுயதொழிலின் தன்மைக்கு ஏற்ப, 10 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையில் வழங்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும், இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளதுடன், அதனை பெற விரும்புவர்கள் தங்களுக்குரிய பிரதேச செயலகத்திலுள்ள சமூக சேவை பிரிவுடன் தொடர்புகொண்டு விண்ணப்பிக்க முடியும் என இமெல்டா சுகுமார் மேலும் தெரிவித்தார்.